Astrology: இரண்டு முறை மாறப்போகும் புதன்.! 3 ராசிகளுக்கு வீடு வாங்கும் யோகம் வரப்போகுது.! பொன், பொருள் குவியப் போகுது.!

Published : Sep 19, 2025, 02:07 PM IST

Budhan Peyarchi: கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் பகவானின் இயக்கத்தில் இரண்டு முறை மாற்றம் ஏற்பட இருக்கிறது. புதனின் இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

PREV
14
இருமுறை நடக்கவுள்ள புதன் பெயர்ச்சி

நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம், தகவல் தொடர்பு, கல்வி ஆகியவற்றின் காரகராக விளங்கி வருகிறார். சந்திரனுக்கு அடுத்தபடியாக மிக வேகமாக தனது நிலையை மாற்றக் கூடியவராக விளங்கி வருகிறார். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் இரண்டு முறை தனது நிலையை மாற்ற இருக்கிறார். அக்டோபர் 2 ஆம் தேதி புதன் உதயமாகி அக்டோபர் 3 ஆம் தேதி துலாம் ராசிக்கு செல்ல இருக்கிறார். அடுத்தடுத்த நாட்களில் புதனின் நிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
துலாம்

புதனின் பெயர்ச்சி மற்றும் உதயம் துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்க உள்ளது. ஏனெனில் புதன் உங்கள் ராசியில் இருந்து லக்ன வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். இதன் காரணமாக உங்களுக்கு பல வழிகளில் நன்மை ஏற்படும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும். இந்த மாதம் நீங்கள் புது சொத்துக்கள், வீடு, நிலம், மனை, கட்டிடம், புதிய வாகனம் ஆகியவை வாங்கும் யோகம் உண்டு. உங்கள் பேச்சுத் திறன் மேம்படும். உங்கள் பேச்சாற்றலால் சுற்றியுள்ளவர்களின் மீது நீங்கள் செல்வாக்கு செலுத்துவீர்கள். உங்கள் பேச்சாற்றல் கொண்டு வணிகத்தை மேம்படுத்துவீர்கள். உங்கள் பேச்சாற்றல் மூலம் குடும்பத்தின் நிலவி வந்த பிரச்சனைகளை சமூகமாக முடிப்பீர்கள்.

34
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி மற்றும் உதயம் சாதகமாக இருக்கும். புதன் உங்கள் ராசியில் இருந்து 12-வது வீட்டிற்கு பெயர்ச்சி அடைவார். இதன் காரணமாக விருச்சிக ராசிக்காரர்களும் நல்ல நிதி நன்மைகளை பெறுவீர்கள். பல வழிகளில் சிக்கி இருந்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரலாம். நீண்ட நாட்களாக அடைக்க முடியாமல் இருந்த கடன்களை அடைப்பீர்கள். வருமானத்தில் இரட்டிப்பு உயர்வு ஏற்படும். நீங்கள் எடுக்கும் காரியம் ஒவ்வொன்றிலும் வெற்றி கிடைக்கும். வணிகம் அல்லது சொந்தமாக தொழில் செய்து வருபவர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவீர்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

44
சிம்மம்

புதனின் இந்த பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய உற்சாகம் மற்றும் உத்வேகத்தை அளிக்கும். புதன் உங்கள் ராசியில் இருந்து மூன்றாவது வீட்டின் வழியாக பெயர்ச்சி அடைவார். எனவே இந்த நேரத்தில் உங்களின் தைரியம் மற்றும் வீரம் அதிகரிக்கும். பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள், உடன் பிறந்தவர்கள் என ஒட்டுமொத்த குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் நம்பிக்கையான முடிவுகளை எடுப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவு உங்களுக்கு வெற்றியை ஈட்டித் தரும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு இந்த காலம் நன்மை பயக்கும். வெளிநாடு செல்ல விரும்புபவர்கள், வேலைக்காக வெளிநாடு செல்ல காத்திருப்பவர்கள், உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories