Name Numerology: பேசியே காரியத்தை சாதிக்க கூடிய 4 ராசிகள் யார் தெரியுமா? இவங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியாது.!

Published : Jun 25, 2026, 12:25 PM IST

Name Numerology: பேசியே காரியத்தை சாதிப்பதில் சில ராசிக்காரர்கள் கில்லாடிகளாக விளங்குகின்றனர். வார்த்தைகளை ஆயுதமாகப் பயன்படுத்தி, எதிரே இருப்பவர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் திறமை படைத்த அந்த 4 ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
16
Name Numerology - 4 zodiac signs who are experts in convincing people

ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்களுக்கு பேச்சுத் திறன், சமாளிக்கும் திறன் மற்றும் மற்றவர்களை எளிதில் கவரும் குணம் இயற்கையாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. அவர்கள் பல நேரங்களில் வலிமையை விட வார்த்தைகளையே ஆயுதமாக பயன்படுத்தி வெற்றி பெறுவார்கள். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:  Numerology Calculator: அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறப்பீர்கள்? பிறந்த தேதியை வைத்தே கண்டுபிடிக்கலாம் வாங்க.!

26
1. மிதுனம்

மிதுன ராசியின் அதிபதி புதன். இவர் பேச்சு மற்றும் புத்திசாலித்தனத்தின் காரகராவார். இவர்களிடம் பேசி ஜெயிக்கவே முடியாது. சமயோசித புத்தி, நகைச்சுவை உணர்வு மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப பேச்சை மாற்றும் திறமை இவர்களிடம் இயல்பாகவே இருக்கும். எப்பேர்ப்பட்ட கடினமான மனிதரையும் தங்களின் இனிமையான பேச்சால் வளைத்து, காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். விவாதம், விற்பனை, பேச்சுவார்த்தை போன்றவற்றில் எளிதில் வெற்றி பெறுவார்கள்.

இதையும் படியுங்கள்:  Numerology: பிறந்த தேதியின்படி நீங்கள் எந்த விலங்கின் குணத்தைக் கொண்டவர்? உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மிருகம் எது தெரியுமா?

36
2. துலாம்

துலாம் ராசிக்காரர்கள் மிகவும் நயமாகவும், நாகரிகமாகவும் பேசக்கூடியவர்கள். யாருடைய மனதும் புண்படாதவாறு, அதே சமயம் தங்களுக்கு என்ன தேவையோ அதை நாசூக்காகக் கேட்டு வாங்கிக்கொள்வார்கள். இவர்களின் பேச்சுவார்த்தை ஒரு டிப்ளமேட்டிக் பாணியில் இருக்கும். பஞ்சாயத்துகளைத் தீர்ப்பதிலும், மற்றவர்களைச் சமாதானப்படுத்துவதிலும் இவர்கள் கெட்டிக்காரர்கள். இவர்களின் இனிமையான அணுகுமுறையால் பல காரியங்கள் எளிதில் நடந்து விடும்.

இதையும் படியுங்கள்:  Numerology: உங்கள் பிறந்த தேதியை சொல்லுங்க.! நீங்க ராமாயணத்தில் எந்த கதாப்பாத்திரம்ன்னு சொல்றோம்.!

46
3. தனுசு

தனுசு ராசியின் அதிபதி குரு. இவர்களின் பேச்சில் ஒரு நேர்மையும், தத்துவமும் கலந்திருக்கும். பார்ப்பதற்கு மிகவும் வெளிப்படையாகப் பேசுவது போல் தெரிந்தாலும், தங்களுக்கு வேண்டியதை எப்படிப் பேசிப் பெற வேண்டும் என்பது இவர்களுக்கு நன்றாகத் தெரியும். இவர்களின் பேச்சில் இருக்கும் ஒருவித 'கம்பீரம்' மற்றும் 'நம்பிக்கை' மற்றவர்களை உடனே சம்மதிக்க வைக்கும். ஆலோசனை வழங்குவதிலும், மற்றவர்களை சம்மதிக்க வைப்பதிலும் திறமைசாலிகள்.

இதையும் படியுங்கள்:  Name Numerology: உங்க பெயர் 'M'ல தொடங்குதா? எப்போ சொந்த வீடு வாங்குவீங்கன்னு தெரிஞ்சுக்கோங்க.!

56
4. கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சாதாரணமாகப் பேச மாட்டார்கள். ஆனால் பேசத் தொடங்கினால் அதில் அத்தனை லாஜிக் மற்றும் புத்திசாலித்தனம் இருக்கும். இவர்களுடைய தனித்துவமான சிந்தனையும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட பேச்சு மற்றவர்களை வியக்க வைக்கும். தங்களின் அறிவுப்பூர்வமான வாத திறமையால் எந்தவொரு காரியத்தையும் எளிதாக முடித்துவிடுவார்கள்.

இதையும் படியுங்கள்:  Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பார்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?

66
குறிப்பு

மற்ற ராசிக்காரர்களுக்கும் பேச்சுத் திறமை இருக்கும் என்றாலும், இந்த 4 ராசிகளுக்கு வார்த்தை ஜாலம் என்பது பிறவியிலேயே கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இது பாரம்பரிய ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையில் கூறப்படும் பொதுவான தகவல் மட்டுமே. ஒருவரின் பேச்சுத் திறன் அவரது கல்வி, அனுபவம், குணநலன் மற்றும் வாழ்க்கைச் சூழல்களாலும் தீர்மானிக்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories