Name Numerology Calculator: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் முன் ஜென்ம பாவங்களை சுமந்து கொண்டு பிறப்பார்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?

Published : Jul 04, 2026, 05:04 PM IST

Name Numerology Calculator: எண் கணிதத்தின்படி சில தேதிகளில் பிறந்தவர்கள் முன் ஜென்ம பாவங்களை சுமந்து கொண்டு பிறப்பதாக கூறப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
16
Name Numerology Calculator

ஜோதிடத்தில் எண் கணிதம் ஒரு முக்கிய அங்கமாகும். ஒருவரின் பிறந்த தேதியை வைத்தே அவரது குணாதிசயங்கள், வாழ்க்கை முறைகள், எதிர்கால வாழ்க்கை ஆகியவற்றை கணிக்க முடியும். எண் கணிதத்தின் படி குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள், முந்தைய பிறவியின் கர்ம வினைகளை இந்த ஜென்மத்தில் சுமந்து கொண்ட பிறக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. எந்த மாதத்தில் பிறந்திருந்தாலும் உங்களுடைய பிறந்த தேதி கீழே உள்ள எண்களை கொண்டிருந்தால் நீங்கள் கர்ம வினையின் தாக்கத்தை அதிகம் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இதையும் படியுங்கள்:  அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறப்பீர்கள்? பிறந்த தேதியை வைத்தே கண்டுபிடிக்கலாம் வாங்க.!

26
எண் 13

13ம் தேதி பிறந்தவர்கள் முந்தைய பிறவியில் சோம்பேறித்தனம், கடமைகளிலிருந்து நழுவுதல் மற்றும் தனது சுயலாபத்திற்காக பிறரைக்காக பயன்படுத்துதல் போன்ற தவறுகளை செய்திருப்பீர்கள். இந்த தவறுகளுக்கு இந்த ஜென்மத்தில் கடினமான உழைத்தாலும் அதற்கான பலன்களோ, அங்கீகாரமோ கிடைக்காது. எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தடைகள், ஏமாற்றங்கள் ஏற்படும். ஒரு வேலையை செய்து முடிக்க மற்றவர்களை விட இரு மடங்கு உழைக்க வேண்டி இருக்கும். இதற்கான பரிகாரம் சோம்பேறித்தனத்தை கைவிட்டு, குறுக்கு வழிகளைத் தேடாமல், நேர்மையான கடுமையான உழைப்பை மட்டுமே நம்ப வேண்டும்.

இதையும் படியுங்கள்:  உங்களுக்கு அடுத்த பிறவி இருக்குமா? இல்லை இதுவே கடைசி பிறவியா? பிறந்த தேதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம் வாங்க.!

36
எண் 14

14ம் தேதியில் பிறந்தவர்கள் முந்தைய பிறவியில் தனக்கு கிடைத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துதல், பிறரின் சுதந்திரத்தை பறித்தல், வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இல்லாமல் தேவையில்லாதவற்றிற்கு அடிமையாகுதல் அல்லது இன்பங்களில் அளவு அதிகமாக மூழ்கி இருத்தல் போன்ற தவறுகளை செய்திருப்பார்கள். இவர்களுக்கு இந்த ஜென்மத்தில் வாழ்க்கையில் திடீர் மாற்றங்களும், எதிர்பாராத இழப்புகளும் ஏற்படும். ஏமாற்றங்கள், சூதாட்டம், போதை பொருட்களுக்கு அடிமையாதல் போன்ற சோதனைகளும் வரக்கூடும். வாழ்க்கையில் ஒழுக்கத்தையும், சுய கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களை ஏமாற்றக்கூடாது. அதுவே இந்த ஜென்மத்தில் நீங்கள் செய்யும் பரிகாரமாகும்.

இதையும் படியுங்கள்:  பிறந்த தேதியின்படி நீங்கள் எந்த விலங்கின் குணத்தைக் கொண்டவர்? உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மிருகம் எது தெரியுமா?

46
எண் 16

16ம் தேதியில் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் கடுமையான அகந்தை, பிறர்களுடைய உணர்வுகளை மதிக்காமல் இருத்தல், காதல் அல்லது உறவுகளில் துரோகம் செய்தல் போன்ற தவறுகளை செய்திருக்கலாம். அவர்களுக்கு இந்த ஜென்மத்தில் அன்பு, நட்பு அல்லது திருமண வாழ்க்கையில் பெரும் சவால்கள் காத்திருக்கும். இவர்களுடைய அகந்தையை உடைக்கும் விதமாக மிக உயர்வாக நினைக்கும் ஒரு விஷயம் (பணம் பதவி அல்லது உறவு) திடீரென சிதைந்து போகலாம். ஆணவத்தை தவிர்த்து பிறரிடம் அன்பாகவும் பணிவாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்வது கர்ம வினைகளை குறைக்க உதவும்.

இதையும் படியுங்கள்:  Numerology: உங்கள் பிறந்த தேதியை சொல்லுங்க.! நீங்க ராமாயணத்தில் எந்த கதாப்பாத்திரம்ன்னு சொல்றோம்.!

56
எண் 19

19ம் தேதியில் பிறந்தவர்கள் முற்பிறவியில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், தன் சுய லாபத்திற்காக பிறரை அடக்கி ஆளுதல் மற்றும் சுயநலம் அதிகம் கொண்டிருந்திருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் பல கட்டங்களில் முற்றிலும் தனித்து விடப்பட்டதாக உணர்வார்கள். இவர்களுக்கு பிறரிடம் உதவி கேட்க தயக்கமாக இருக்கும். அப்படியே கேட்டாலும் உதவி கிடைக்காது. தங்களின் பிரச்சனைகளை தாங்களே தனியாக போராடி தீர்க்க வேண்டியிருக்கலாம். இதற்கான பரிகாரம் சுயநலத்தை கைவிட வேண்டும். பிறருக்கு கைமாறு கருதாமல் உதவி செய்ய வேண்டும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:  Numerology: முன் ஜென்மத்தில் நீங்கள் என்னவாக பிறந்தீர்கள்? பிறந்த தேதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம் வாங்க.!

66
முக்கிய குறிப்பு

எண் கணிதத்தில் கர்ம வினை எண்கள் என்பது உங்களை பயமுறுத்துவதற்கு அல்ல. மாறாக உங்களின் பலவீனம் என்பதை சுட்டிக்காட்டி அதை சரி செய்து திருத்துவதற்கான வழிகாட்டி மட்டுமே. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு பிறருக்கு உதவியாக வாழும் பொழுது கர்ம வினைகளின் தாக்கம் படிப்படியாக குறைந்து நற்பலன்கள் தேடி வரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories