எண் கணிதத்தின்படி ஒருவரின் பிறந்த தேதியை வைத்து அவர்களின் குணாதிசயங்கள் மற்றும் இயல்பை புரிந்து கொள்ள முடியும். இயல்பாகவே பெண்களாக பிறந்தவர்கள் ரகசியமான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்வில் நடக்கும் அனைத்தையும் ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறார்கள்.
இருப்பினும் குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்த பெண்கள் மிகவும் ரகசியமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் இதயங்களிலேயே அனைத்தையும் பூட்டிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் வாயிலிருந்து அவ்வளவு எளிதில் வார்த்தைகளை நம்மால் வாங்கி விட முடியாது. அத்தகைய எண்களில் பிறந்த பெண்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மூல எண் 7:
ஒவ்வொரு மாதமும் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 7 ஆகும். அதாவது அவர்களின் பிறந்த தேதியின் இலக்கங்களை சேர்ப்பதன் மூலம் பெறப்படும் எண் ரேடிக்ஸ் எண் அல்லது மூல எண் என்று அழைக்கப்படுகிறது. மேற்கூறிய தேதிகளில் பிறந்த பெண்கள் கேதுவின் செல்வாக்கு அதிகமாக இருக்கும்.
நம்பர் 7 என்பது கேது கிரகத்துடன் தொடர்புடைய எண்ணாகும். கேது பகவான் ரகசியங்கள், மர்மங்கள், மறைக்கப்பட்ட விஷயங்கள் ஆகியவற்றின் காரகரான கிரகமாகும். எனவே இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் எந்த ஒரு விஷயத்தையும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள். அவர்களின் எண்ணங்கள் மிகவும் ஆழமாக இருக்கும்.
அதிபுத்திசாலிகள்
ரேடிக்ஸ் எண் 7 கொண்ட பெண்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் மிக சுறுசுறுப்பாக இருப்பார்கள். துணிச்சலான காரியங்களை செய்து முடிப்பார்கள். கடினமான வேலைகளை கூட தலைமை ஏற்று எளிதாக முடிப்பார்கள். அவர்கள் எல்லாவற்றையும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள்.
சவாலான சூழ்நிலைகளையும் அமைதியாக சமாளிப்பார்கள். தங்கள் மனதை கட்டுக்குள் வைத்திருப்பதில் அவர்களை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை. தங்கள் உணர்வுகளை மிக மெதுவாகவே வெளிப்படுத்துவார்கள். அதனால் தான் அவர்களை புரிந்து கொள்வது மிகவும் கடினமானதாக இருக்கும்.
கடின உழைப்பாளிகள்:
மேற்கூறிய தேதிகளில் பிறந்த பெண்கள் தங்கள் தொழில் வாழ்க்கையைப் பற்றி நிறைய சிந்திப்பார்கள். உழைத்து முன்னேற வேண்டும் என்று கடினமான உழைப்பை நல்குகிறார்கள். அவர்கள் அர்ப்பணிப்புடன் சரியானவர்களாக இருக்க விரும்புகிறார்கள். இதன் காரணமாக குடும்பத்திலும், சமூகத்திலும் அவர்களின் மரியாதை அதிகரிக்கிறது. இந்த பெண்கள் தங்கள் அன்புக்குரியவர்களை தவிர மற்றவர்களுடன் இருக்க விரும்புவதில்லை.
குறைவான நண்பர்கள்:
ரேடிக்ஸ் எண் 7 உள்ள பெண்களுக்கு மிக குறைவான நண்பர்களே உள்ளனர். இவர்கள் ஒரு சிலருடன் மட்டுமே நட்பு கொள்கின்றனர். உறவுகளில் நம்பிக்கை என்பது அவர்களுக்கு முக்கியம். அவர்கள் நேசிப்பவர்களுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள். அவர்கள் யாரை அதிகமாக நம்புகிறார்களோ அவர்களிடம் மட்டுமே ரகசியங்களை வெளிப்படுத்துவார்கள். மற்றவர்களின் ரகசியங்களை அறியவும் அவர்கள் விரும்புவதில்லை.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)