ஏப்ரல் 13 முதல் 'இந்த' 4 ராசிகளுக்கு ஆபத்து.. சந்திரன்-ராகு சேர்க்கையால் கிரகண தோஷம்.. பரிகாரம் இதோ!

Published : Apr 11, 2026, 03:58 PM IST

Astrology In Tamil: சந்திரன், ராகு சேர்க்கையால் 4 ராசிகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எந்தெந்த ராசிகள்? அதற்கு என்னென்ன பரிகாரங்கள்? என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
16
சந்திரன்-ராகு சேர்க்கை

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு கிரகம் தனது நிலையை மாற்றிக் கொள்கிறது. அந்த வகையில் ஏப்ரல் 13ம் தேதி அன்று சந்திரன் கும்ப ராசியில் நுழைகிறது. ராகு ஏற்கனவே கும்ப ராசியில் தான் உள்ளது. ஆகவே கும்ப ராசியில் சந்திரனும் ராகுவும் இணைவதால் ஒரு ஆபத்தான கிரகண யோகத்தை உருவாக்குகிறது. சந்திரனும், ராகுவும் இணைவதால் நான்கு ராசிக்காரர்களுக்கு இது கடுமையான காலகட்டமாக மாறி உள்ளது.

சந்திரனின் இந்த பெயர்ச்சி மன அழுத்தத்தை கொடுக்கும். வேலையில் மற்றும் பொருளாதாரத்தில் இழப்புகளை உண்டு பண்ணும். சந்திரனும். ராகுவும் இணைவதால் பாதிக்கப்படும் நான்கு ராசிகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

26
கன்னி

கிரகணகத்தில் அசுப விளைவுகளால் கன்னி ராசிக்காரர்களுக்கு இது சிக்கலான காலகட்டமாகும். இந்த நேரத்தில் நீங்கள் புதிய திட்டங்கள் அல்லது பெரிய மாற்றங்களை சிறிது காலத்திற்கு ஒத்திவைப்பது நன்மை பயக்கும். உங்கள் பேச்சில் நிதானம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மோதல் ஏற்படாமல் இருக்க உதவும்.

 உங்கள் முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும் என்பதால் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆராய்ந்து செய்வது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. . யோகா அல்லது தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.

36
விருச்சிகம்

சந்திரன் உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாயுடன் நட்பு கிரகமாக இருந்தாலும் கிரகண தோஷம் பொருளாதார வழியில் சில தடைகளை உண்டு பண்ணலாம். இந்த காலகட்டத்தில் கடன் வாங்குவது அல்லது கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள். மறைமுக எதிர்ப்புகள் உருவாகலாம். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர வேண்டாம். குலதெய்வ வழிபாடு மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் சிறிது பாதிப்புகள் குறையும்.

46
மேஷம்

மேஷ ராசி நேயர்களே.. ராகுவின் தாக்கம் நேரடியாக அல்லது மறைமுகமாக இருக்கும்போது தேவையில்லாத மன குழப்பங்கள் ஏற்படும். பணியிடங்களில் சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காமல் நிதானத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். முக்கியமான முதலீடுகளை இந்த காலகட்டத்தில் தள்ளிப் போடுவது சாலச்சிறந்தது.

56
மீனம்

மீன ராசி நேயர்களே... தற்போது ராகு உங்கள் ராசியில் சந்திப்பதால் இந்த கிரகண காலங்கள் உங்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். மீன ராசியில் ராகு இருப்பதாலும் அதன் சமசப்த பார்வையில் கேது கன்னி ராசியிலும் இருப்பதாலும் சில பாதிப்புகள் உண்டாகலாம். இந்த காலகட்டத்தில் தேவையற்ற பயம் உண்டாகும். தூக்கமின்மை ஏற்படும். எதிர்காலத்தை பற்றிய பயம் உண்டாகலாம். 

உங்கள் கற்பனை திறன் எதிர்மறை எண்ணங்களை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு பிறகு வேலையை மாற்றுதல் அல்லது புதிய சொத்துக்களை வாங்குதல் போன்ற விஷயங்களில் நன்கு ஆராய்ந்து சிந்தித்து முடிவெடுக்கவும். உடல் நலனை பொறுத்தவரையில் ஒவ்வாமை அல்லது செரிமான சிக்கல்கள் ஏற்படலாம் ஆகவே உணவு சேர்த்தில் கட்டுப்பாடாக இருங்கள்.

66
இந்த 4 ராசிக்காரர்கள் என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக ராகு குழப்பத்தை விளைவிப்பதில் வல்லவர் ஆகவே மேற்கண்ட இந்த நான்கு ராசிக்காரர்களும் எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் தெளிவாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இந்த கிரகண காலங்களில் ஓம் நமச்சிவாய மந்திரத்தை சொல்வதும் கிரகணம் அடைந்த பிறகு தான தர்மங்கள் செய்வதும் உங்களுக்கு நீண்ட நன்மையை தரும்.

Read more Photos on
click me!

Recommended Stories