Moon Jupiter Conjunction Forms Gajakesari Rajayogam : குருவும், சந்திரனும் இணையும் நிலையில் அது கஜகேசரி ராஜயோகமாக உருவாகிறது. இந்த யோகம் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்த தரப்போகிறது. அந்த ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.
குருவும், சந்திரனும் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. குரு சுப கிரகம். நன்மைகளை செய்யக் கூடியவர். இதே போன்று சந்திரன் மனதை குறிக்கிறது. இது பெண்ணிய கிரகம். இந்த 2 கிரகங்களும் இணையும் போது அது ஜோதிடத்தில் யோகமாக கருதப்படுகிறது. அந்த யோகம் தான் கஜகேசரி ராஜயோகம். இந்த கஜகேசரி ராஜயோகம் வரும் 22 ஆம் தேதி மிதுன ராசியில் உருவாகிறது. அப்படி உருவாகும் கஜகேசரி ராஜயோகம் 24ஆம் தேதி வரையில் நீடிக்கிறது.
25
கஜகேசரி ராஜயோகம் பலன்
குருவும் சந்திரனும் இணைந்து கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. செல்வம் செல்வாக்கு அதிகரிக்க செய்யும், பேரும், புகழும் கிடைக்கும், ஆன்மிகத்தில் உயர்வு ஏற்படும் இப்படி பல நன்மைகளை குரு சந்திரன் இணைவு தரும்.
35
ரிஷப ராசிக்கான கஜகேசரி ராஜயோக பலன்:
இந்த யோகம் உங்களது ராசியுடன் திருமண ஸ்தானத்தில் உருவாகிறது. தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் திரும்ப கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். உங்களது பேச்சுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நண்பர்கள் மூலமாக உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க பெறுவீர்கள். ஊடகத்துறை, வங்கித் துறையில் இருப்பவர்களுக்கு அதிக லாபம் வரும்.
45
சிம்ம ராசிக்கான கஜகேசரி ராஜயோகம் பலன்
கஜகேசரி ராஜயோகம் உங்கள் ராசிக்கு வருமானம் மற்றும் லாப ஸ்தானத்தில் உருவாகிறது. எனவே, இந்த தருணத்தில் உங்களது வருமானம் இரட்டிப்பாகும். பணம் பல வழிகளில் வந்து சேரும். புதிய வருமான ஆதாரங்களும் உருவாகலாம். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். மன அமைதி கிடைக்கும். பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு தீரும்.
55
துலாம் ராசிக்கான கஜகேசரி ராஜயோகம் பலன்:
குரு சந்திரன் இணைவானது துலாம் ராசிக்கு பல நன்மைகளை தர போகிறது. இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை உருவாக்குகிறது. வெளியூர், வெளிநாட்டு யோகம் தேடி வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்களது பேச்சுக்கு மதிப்பு, மரியாதை கிடைக்கும்.