Sani Vakra Peyarchi 2025 Palan Predictions in Tamil : மீன ராசியில் சனி பகவான் வக்ர கதியில் பயணிக்க தொடங்கிய நிலையில் விபரீத ராஜயோகம் மற்றும் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. அதைப் பற்றி முழுவதுமாக பார்க்கலாம்.
ஒவ்வொரு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறையும் சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார். திரும்ப 30 ஆண்டுகளுக்கு பிறகு தான் அந்த ராசிக்கு வருவார். இந்த சூழலில் சுப யோக ராஜயோகம் உருவாகிறது. இதே போன்று சனி வக்ர கதியில் பயணிக்கும் நிலையில் விபரீத ராஜயோகமும், கேந்திர திரிகோண ராஜயோகமும் உருவாகியிருக்கிறது. இது செல்வ செழிப்பு, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை குறிக்கிறது. மீன ராசியில் சனி பகவான் 138 நாட்கள் வக்ர கதியில் இருப்பார். அதன் பிறகு வக்ர நிவர்த்தி அடைவார். இது 5 முக்கியமான ராசிகளுக்கு என்னென்ன பலன்களை கொடுக்கிறது என்பதைப் பற்றி பார்க்கலாம்.
26
மிதுன ராசிக்கான சனி வக்ர பெயர்ச்சி பலன்:
வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலை மேம்படும். உங்களுடைய ஆசைகள் யாவும் நிறைவேறும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் மற்றும் நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலில் கூட்டு முயற்சி லாபகரமாக இருக்கும். தொழில் முனைவோர் புதிய ஒப்பந்தங்கள் அல்லது கூட்டாண்மைகளால் லாபம் அடையலாம்.
36
கடகம் ராசிக்கான சனி வக்ர பெயர்ச்சி பலன்:
நிதி நிலை மேம்படும் கூட்டுத் தொழில் லாபம் தரும். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதுஉறவுகள் மேம்படும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் அவ்வப்போது ஏற்படலாம். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு கட்டும் முயற்சிகள் யாவும் பலனிக்கும்.
46
விருச்சிகம் ராசிக்கான சனி வக்ர பெயர்ச்சி பலன்:
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். திருமண வயதை எட்டியவர்களுக்கு திருமண வரன் தேடி வரும். முதலீட்டில் லாபம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், டிரான்ஸ்போர்ட் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க பெறும். தொழிலுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் முயற்சிகள் பலனளிக்கும். நிறுத்தி வைக்கப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கும்.
56
தனுசு ராசிக்கான சனி வக்ர பெயர்ச்சி பலன்:
வாழ்க்கையில் அமைதி நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வரன் தேடி வரும். கூட்டு தொழில் லாபம் தரும். தொழில், பணம் மற்றும் பிற துறைகளில் முன்னேற்றம் அடைவீர்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். ஏதேனும் பழைய கடனில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது. வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
66
மகரம் ராசிக்கான சனி வக்ர பெயர்ச்சி பலன்:
படித்து முடித்து வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உங்கள் தொழில் வாழ்க்கையில் புதிய சாதனைகளைப் படைப்பீர்கள். தொழில் முனைவோருக்கு, இந்த நேரம் லாபம் ஈட்டவும் புதிய திட்டங்களை செயல்படுத்தவும் சாதகமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறலாம்.