
Mesham New Year 2025 Rasi Palan in Tamil : 2025 ஆம் ஆண்டு புத்தாண்டில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சி நிகழ போகிறது. இந்த முக்கியமான பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் நல்ல மற்றும் கெடு பலன்களை கொடுக்கும். அந்த வகையில் இந்த பெயர்ச்சிகளின் அடிப்படையில் ராசிக்கட்டத்தின் முதல் ராசியான மேஷ ராசிக்கு எந்த மாதிரியான பலன்கள் நடக்கும் என்று பார்க்கலாம் வாங்க.
2025 ஆங்கிய புத்தாண்டு மேஷ ராசிக்கான உடல் ஆரோக்கிய பலன்:
2025 ஆம் ஆண்டைப் பொறுத்த வரையில் மேஷ ராசிக்கு பலவீனமான ஆண்டாக இருக்கலாம். மார்ச் வரையில் சாதகமான நிலையில் இருக்கும் சனி பகவான் அதன் பிறகு ஏழரை சனியாக மாறுகிறார். ஆண்டின் தொடக்கம் முதல் 3 மாதங்களுக்கு உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும். அதன் பிறகு எஞ்சிய மாதங்களில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். முதல் திருமணம் முடிந்து 2ஆவது திருமணம் செய்தவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
2025 ஆங்கில புத்தாண்டு மேஷ ராசிக்கான பலன் - கல்வி:
2025 ஆம் ஆண்டைப் பொறுத்த வரையில் சிறப்பானதாக இருக்கும். கடந்த ஆண்டில் நன்றாக படிக்காதவர்கள் கூட இந்த ஆண்டில் சிறப்பாக படித்து தேர்வில் வெற்றி பெறுவார்கள். ஏழரை சனி காலம் என்பதால் தடை, தாமதங்களுக்கு பிறகு உங்களுக்கு வெற்றி கிடைக்கும். கம்யூனிகேஷன் துறையில் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும்.
மகர ராசிக்கான 2025 புத்தாண்டு பலன் – விடிவுகாலம் பிறக்குமா? முடிய போகுது ஏழரை, அள்ளி கொடுக்கும் சனி!
மேஷ ராசிக்கு 2025 ஆங்கில புத்தாண்டு பலன் – வியாபாரம்:
2025 ஆம் ஆண்டை பொறுத்த வரையில் வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும். ஜனவரி முதல் மார்ச் வரையில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். ஆனால், மார்ச் மாதத்திற்கு பிறகு ஏழரை சனி காலம் என்பதால், வியாபாரத்தில் சிக்கல் ஏற்படலாம். வெளிநாடு மற்றும் வெளியூரில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல பலன்களை பெறுவார்கள்.
2025 புத்தாண்டு கடக ராசி பலன் – உங்களுக்கான ஆண்டா? ராஜயோகம் அமையுமா? ஜாப், பிஸினஸ் எப்படி?
மேஷ ராசிக்கு 2025 ஆம் ஆண்டு பலன் – வேலை:
மேஷ ராசியினருக்கு 2025 ஆம் ஆண்டு முதல் 3 மாதங்கள் நல்ல பலன்களை கொடுக்கும். அதன் பிறகு மார்ச் 29ஆம் தேதி நிகழக் கூடிய சனி பெயர்ச்சி வேலையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். கடினமாக உழைக்க வேண்டி வரும். அலுவலகத்தில் சிக்கல் ஏற்படும். உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்ல வேண்டி வரும்.
2025 ஆம் ஆண்டு மேஷ ராசி பலன் – பொருளாதாரம்:
கடந்த ஆண்டை விட 2025 ஆம் ஆண்டு மேஷ ராசியினருக்கு பொருளாதாரத்தில் சிறப்பான பலனைத் தரும். குரு பகவான் உங்களுக்கு சாதமாக நிலையில் இருப்பதால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். இதன் மூலமாக செல்வ, செழிப்பு உண்டாகும். ராகுவின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமான திசையில் இருப்பதால் சேமிப்பு உயரும். பல வழிகளிலிருந்து பணம் வந்து சேரும். உழைப்புக்கு ஏற்ப ஊதியம் கிடைக்கும்.
மேஷ ராசிக்கான 2025 ஆம் ஆண்டு பலன் – காதல் வாழ்க்கை:
சனியால் மேஷ ராசியினருக்கு காதல் வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. உண்மையான காதலாக இருந்தால் சனி பகவானின் ஆதரவு இருக்கும். எனினும், ராகு கேதுவால் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். காதலிப்பவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. காதலில் புரிதல் அவசியம். இல்லையென்றால் காதல் உறவில் பிரச்சனை ஏற்படக் கூடும்.
உங்களது வீட்டில் மனைவியோ, கணவனோ அல்லது வேறு யாரேனும் தனுசு ராசியா இருந்தால் அவர்களுக்கான பலன்: தனுசு ராசிக்கான 2025 புத்தாண்டு பலன் – ஒரு காலத்துல ஓஹோனு வாழ்ந்த ராசி - வேலை போகுமா? சம்பளம் கூடுமா?
2025 புத்தாண்டு மேஷ ராசிக்கான பலன் – திருமணம்
இந்த ஆண்டில் இளைஞர்களுக்கு திருமணம் நடக்கும். குருவின் பார்வை உங்களுக்கு திருமண யோகத்தை ஏற்படுத்தித் தருவார். 2025 ஆம் ஆண்டைப் பொறுத்த வரையில் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். திருமணத்தை மீறிய உறவில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ராகு கேது பெயர்ச்சி திருமணத்தை மீறிய உறவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
மேஷ ராசிக்கான 2025 புத்தாண்டு பலன் – குடும்பம்:
2025 ஆம் ஆண்டைப் பொறுத்த வரையில் மேஷ ராசியினருக்கு ஆண்டின் தொடக்கத்தில் நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதன் பிறகு குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்படும். வீண் வாக்குவாதம் ஏற்படக் கூடும். கணவன் மனைவியாக இருந்தால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை அளிக்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள்.
உங்களுக்கு தெரிந்த யாரேனும் விருச்சிக ராசியாக இருந்தால் அவர்களுக்கான பலன்: விருச்சிக ராசிக்கான 2025 புத்தாண்டு பலன் – Love மேரேஜ் நடக்குமா? லச்சாதிபதி யோகம் இருக்கா? வருமானம், வேலை?
நிலம், வீடு கட்டும் யோகம், வண்டி, வாகனம் யோகம்:
சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் வீடு கட்ட விரும்பினால் அதற்கான வேலைகளை செய்யலாம். ஆனால், புதிதாக நிலம் வாங்கி, அதில் வீடு கட்ட வேண்டும் என்று எண்ணம் இருந்தால் இப்போதைக்கு தள்ளி வைப்பது நல்லது. அதே போன்று தான் வண்டி, வாகனும் இப்போதைக்கு தள்ளி வைப்பது நல்லது. இது வண்டி, வாகனம் வாங்க ஏற்ற காலம் இல்லை. மேலும், பழைய வாகனமாக இருந்தால் அதனை பட்டி டிங்கரிங் செய்து பயன்படுத்தலாம். வீடும் சேதமடைந்திருந்தால் பழுது பார்க்கும் வேலையை செய்யலாம். நிலம் வைத்திருப்பவர்கள் அவரவர் ஜாதகத்தை பார்த்து தெரிந்து கொண்டு வீடு கட்டுவது நன்மை அளிக்கும்.
பரிகாரம்:
2025 ஆம் ஆண்டைப் பொறுத்த வரையில் மேஷ ராசிக்காரர்கள் கெடு பலன்கள் பாதிப்பு குறைய சனிக்கிழமை தோறும் அசைவ உணவை தவிர்த்து சனி பகவானை வழிபட வேண்டும்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆஞ்சநேயருக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கு துர்க்கை வழிபாடு செய்யலாம்.
மேஷ ராசியினருக்கு 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி முதல் ஏழரை சனி காலம் என்பதால் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏழரை சனி காலம் 2032 மே 31 ஆம் தேதி வரையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
12 ராசிகளுக்கான 2025 புத்தாண்டு பலன் - ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஒன் லைன் பலன் - யாருக்கு நல்லது நடக்கும்?