Mesha Rasi March Matha Rasi Palan Predictions in Tamil : பிப்ரவரி மாதம் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிய உள்ள நிலையில் மார்ச் மாதம் மேஷ ராசிக்கு நன்மையா? தீமையா என்பது பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசிக்கு மார்ச் மாதம் ராசி பலன் எப்படி? ஏழரை சனி ஸ்டார்ட் ஆகுதா?
மார்ச் மாத 2025 கிரக நிலைகளின் படி இந்த மாதம் உங்களுக்கு ஏராளமான பலன்களை தரும். தொழில் காரகன் உங்களுக்கு சாதகமான இடத்தில் இருக்கும் நிலையில் தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அதனால் வருமானம் உயரும். ஆனால், சற்று கவனமாக இருக்க வேண்டும். தொழில் காரகன் சாதமாக இருந்தாலும் உங்களுக்கு சனி பகவான் சாதகமற்ற நிலையில் இருக்கிறார். அதுமட்டுமின்றி அவர் பலவீனமாகவும் இருக்கிறார். அதனால், எதையும் யோசித்து செய்வதோடு கவனமாகவும் செய்ய வேண்டும். சிக்கலில் மாட்டிக் கொள்ள கூடாது.
24
மேஷ ராசிக்கு மார்ச் மாதம் ராசி பலன் எப்படி? ஏழரை சனி ஸ்டார்ட் ஆகுதா?
இதே போன்று தான் சூரிய பகவானும் உங்களுக்கு 5ஆவது வீட்டை பார்த்தாலும் சனி பகவானின் சாதகமற்ற நிலை காரணமாக உங்களுக்கு சூரிய பகவானின் முழு பலனும் கிடைக்காது. அதாவது எளிதில் முடிய வேண்டிய வேலைக்கு கூட நீங்கள் ரொம்பவே கஷ்டப்பட வேண்டியிருக்கும். குருவின் ஆதரவு இந்த மாதம் உங்களுக்கு கிடைக்கும். மேலும், குரு சந்திர யோகமும் உங்களுக்கு கிடைக்கு. இந்த யோகம் காரணமாக பேரும், புகழும் கிடைக்க பெறுவீர்கள். அறவழியில் செல்வம் சேரும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மேஷ ராசிக்கு மார்ச் மாதம் ராசி பலன் எப்படி? ஏழரை சனி ஸ்டார்ட் ஆகுதா?
உடன் பிறந்தவர்களுடன் பிரச்சனை இருக்காது. அவர்களுடன் ஒற்றுமையுடன் இருப்பீர்கள். சூரியன் லாப ஸ்தானத்தில் இருந்தாலும் கூட சனியின் தாக்கம் காரணமாக உங்களுக்கு காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். திருமண உறவிலும் சண்டை, சச்சரவுகள் வரலாம். அதோடு இந்த மாதம் 29ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த மாதம் முதல் உங்களுக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது.
மேஷ ராசிக்கு மார்ச் மாதம் ராசி பலன் எப்படி? ஏழரை சனி ஸ்டார்ட் ஆகுதா?
கடந்த சில ஆண்டுகளில் நீங்கள் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப பலன் கிடைக்கும். நல்லது செய்திருந்தால் நன்மை நடக்கும். கெடுதல் செய்திருந்தால் கெடு பலன்கள் நடக்கும். என்னதான் சூரியன் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் இருந்தாலும் காதல் உறவில் சனியின் தாக்கம் காரணமாக பிரச்சனைகள் வரலாம். ஆனால், சுக்கிரன் சாதகமான நிலையில் இருக்கும் நிலையில் திருமண வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து சென்றால் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.