
February 2025 Planetary Transits Palan Tamil : சூரியன், புதன் உட்பட 3 முக்கிய கோள்கள் ராசி மாற உள்ளன. தேவர்களின் குருவான குரு பகவான் பிப்ரவரி 4ஆம் தேதி பிற்பகல் 3:09 மணிக்கு ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைவார். பிப்ரவரி 11ஆம் தேதி, கிரகங்களின் இளவரசரான புதன் ராசி மாறுவார். இந்த நாளில் மதியம் 12:58 மணிக்கு, புதன் கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைவார். பிப்ரவரி 12ஆம் தேதி, கிரகங்களின் ராஜாவான சூரியன் இரவு 10.03 மணிக்கு சனியின் ராசியான கும்ப ராசிக்குள் நுழைவார். ஏற்கனவே கும்பத்தில் புதன் இருக்கும் நிலையில் சூரியனும் கும்பத்தில் இணைவதால் புத ஆதித்ய் ராஜயோகம் உருவாகிறது. சூரியன், புதன், குரு ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி 4 ராசிகளுக்கு யோகத்தை கொண்டு வந்து தரப் போகிறது. அதைப் பற்றி பார்க்கலாம்.
பிப்ரவரி 27ஆம் தேதி புதன் ராசி மாறுவார். இந்த நாளில் காலை 11:46 மணிக்கு புதன் கும்ப ராசியிலிருந்து குருவின் ராசியான மீன ராசிக்கு பெயர்ச்சி அடைவார். இந்த 3 முக்கிய கோள்களின் பெயர்ச்சியும் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். வேலை முதல் தொழில், குடும்ப உறவுகள் மற்றும் நிதி நிலை வரை, பிப்ரவரியில் இந்த முக்கிய கோள்களின் பெயர்ச்சி 4 ராசிகளுக்கு சாதகமான பலன்களைத் தரும்.
மிதுன ராசிக்கான 3 கிரகங்களின் பெயர்ச்சி பலன்:
மிதுன ராசிக்கு இது பொற்காலம். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். காதல் வாழ்க்கையும் ஜோராக இருக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும். உறவுகள் இனிமையாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பிப்ரவரி வெற்றிகரமான மாதம். பெரிய லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். நிலுவையில் உள்ள பணிகள் விரிவடையும். திடீர் பண வரவு கிடைக்கும். சண்டை, சச்சரவு முடிவுக்கு வரும்.
கடகம் ராசிக்கான குரு, புதன், சூரியன் பெயர்ச்சி பலன்:
கடக ராசியைப் பொறுத்த வரையில் புதன், சூரியன் மற்றும் குரு ஆகிய 3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி உங்களுக்கு எல்லா நன்மைகளையும் கொண்டு வந்து தரும். அனைத்து துறைகளிலும் லாபம் கிடைக்கும். எதிரிகள் உங்களிடம் தோற்று விலகும் நிலை வரும். வெற்றி மீது வெற்றிகள் குவியும். உங்களது வேலை பாராட்டப்படும் வகையில் இருக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு மதிப்பு, மரியாதை அதிகைக்கும். பிப்ரவரி மாதத்தில் புதிய வீடு, புதிய கார் அல்லது நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். பிப்ரவரியில் கோள்களின் ராசி மாற்றத்தால் செல்வம் பெருகும். பெரிய நிதி லாபம் கிடைக்கலாம்.
சிம்ம ராசிக்கான புதன், சூரியன், குரு பெயர்ச்சி பலன்:
சிம்ம ராசியை பொறுத்த வரையில் புதன், சூரியன் மற்றும் குரு ஆகிய 3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி தொழில் வாழ்க்கையில் எல்லா வெற்றிகளையும் கொண்டு வந்து தரும். வேலைக்கு செல்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். முன்னேற்றத்திற்கான பாதை தென்படும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவலகத்தில் நீங்கள் செய்த வேலை மேலதிகாரிகளுக்கு மகிழ்ச்சியை கொண்டு வந்து தரும். புதிய கார், பைக், வீடு, நிலம் வாங்கும் யோகம் தேடி வரும். தந்தையின் சொத்தில் இருந்து லாபம் கிடைக்கலாம். புனித யாத்திரை செல்லலாம். இந்த மாதம் வழிபாடு மற்றும் தியானத்தில் ஈடுபடலாம்.
கும்ப ராசிக்கான கிரகங்களின் பெயர்ச்சி பலன்:
கும்ப ராசியைப் பொறுத்த வரையில் பிப்ரவரியில் பெயர்ச்சியாக கூடிய 3 முக்கிய கிரகங்கள் நேர்மறையான பலன்களை கொண்டு வந்து தரும். கல்வி மற்றும் போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். பிப்ரவரியில் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வழிகள் திறக்கப்படும். முன்னேற்றத்திற்கான வழிகள் திறக்கும். திட்டமிட்ட பணிகளில் வெற்றி கிடைக்கும்.