பிப்ரவரியில் அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் டாப் 5 ராசிக்காரர்கள்: கஷ்டமில்லா வாழ்க்கை கிடைக்குமா?
Top 5 Lucky Zodiac Signs on February 2025 Matha Rasi Palan Tamil : 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தின் 2ஆவது மாதமான பிப்ரவரி மாதம் சிறப்பான மாதமாக இருக்கும். இந்த மாதம் சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் புதன் கிரகங்கள் தங்களது பெயர்ச்சியை மாற்றுகின்றன. இந்த மாதம் 4ஆம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். இப்படி கிரகங்கள் தங்களது ராசியை மாற்றுவதால் இந்த 5 ராயினருக்கு பிப்ரவரி பல அற்புதங்களை செய்ய போகிறது.
50 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய் புஷ்ய யோகம்: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், நீங்க தான் கோடீஸ்வரன்!
Top 5 Lucky Zodiac Signs on February 2025 Matha Rasi Palan Tamil
மிதுன ராசிக்கான பிப்ரவரி 2025 மாத ராசி பலன்:
மிதுன ராசியைப் பொறுத்த வரையில் பிப்ரவரி மாதம் பயணங்களுக்கான மாதமாக இருக்கும். காதல் கை கூடும். காதலன் அல்லது காதலியை சந்தித்து மகிழ்வீர்கள். அவர்களுடன் நேரம் செலவிடுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலையில் சிறப்பான பலன் கிடைக்க பெறும். குறைவாக உழைத்தாலும் அதற்கேற்ப பலன் கிடைக்கும். திருமணமானவர்கள் தங்கள் உறவை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள். பெற்றோரின் உடல் நிலையில் அக்கறை காட்டுவது நல்லது.
February 2025 Matha Rasi Palan Tamil
கடகம் ராசிக்கான பிப்ரவரி மாத ராசி பலன்:
கடக ராசியை பொறுத்த வரையில் பிப்ரவரி சாதகமான பலனை கொண்டு வந்து தரும். இந்த மாதம் குழந்தைகளுடன் தொடர்புடைய நல்ல செய்தி கிடைக்கலாம். திடீர் லாபத்தால் மகிழ்ச்சி ஏற்படும். இந்த மாதம் ஒருவருடன் சந்திப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குறுகிய கால பயணம் மேற்கொள்ளலாம். உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும். இல்லையெனில் விபத்துக்கள் ஏற்படலாம். மற்றபடி பிப்ரவரி மாதம் உங்களுக்கு சாதகமான பலனை கொண்டு வந்து தரும்.
ராஜ வாழ்க்கை தரும் லட்சுமி நாராயண யோகம்; இனிமேல் இந்த 4 ராசிக்காரர்கள் தான் கோடீஸ்வரன்!
February 2025 Rasi Palan Tamil
சிம்ம ராசிக்கான பிப்ரவரி 2025 மாத ராசி பலன்:
வருமானம் உயரும். தொழில் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். காதல் உறவுகளில் தவறான புரிதலை தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையை அனுசரித்து செல்ல வேண்டும். இல்லையென்றால் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். திடீரென்று பயணம் மேற்கொள்ளும் நிலை உருவாகும்.
ஜனவரி கடைசி வார ராஜயோகம்: 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு உண்டாகும்!
2025 February Matha Rasi Palan Tamil
கன்னி ராசிக்கான பிப்ரவரி 2025 மாத ராசி பலன்:
இந்த மாதம் நீங்கள் வணிகம் அல்லது வேலைக்காக பயணம் செய்ய வேண்டியிருக்கும். குடும்பத்தில் ஒருவரின் உடல்நிலை திடீரென மோசமடையலாம். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், உங்களுக்கு லாபம் கிடைக்கும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று வருவீர்கள்.
சந்திரன் பெயர்ச்சி: ஜனவரியில் நிகழும் அற்புதம்; இனி உங்க வளர்ச்சியை தடுக்கவே முடியாது!
February Rasi Palan Tamil
மீன ராசி பலன் பிப்ரவரி 2025
இந்த மாதம் மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். சுகபோகப் பொருட்களுக்கு பணம் செலவழிக்கப்படும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். இந்த மாதம் நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். வேலையில் பெரிய பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய பண லாபம் கிடைக்கலாம். வேலை மாற நினைப்பவர்களுக்கு அவர்களின் விருப்பம் நிறைவேறும்.
காதலர் தினம் 2025; காதலில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யாரெல்லாம் தெரியுமா?