காதலர் தினம் 2025; காதலில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யாரெல்லாம் தெரியுமா?

Published : Feb 01, 2025, 11:30 AM IST

Top 5 Zodiac Signs Who Should Be Careful in Love : காதலர் தினம் நெருங்கி வரும் நிலையில் இந்த மாதம் இந்த 5 ராசியினர் காதல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
காதலர் தினம் 2025; காதலில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யாரெல்லாம் தெரியுமா?
Top 5 Zodiac Signs Who Should Be Careful in Love

Top 5 Zodiac Signs Who Should Be Careful in Love : 2025 ஜனவரி மாதம் முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு நாட்களில் காதலர் மாதமான பிப்ரவரி தொடங்குகிறது. பிப்ரவரி என்றாலே காதலர் தினம் நினைவுக்கு வரும். இந்த காதலர் தினத்தை பலர் மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். சிலர் தங்கள் காதலை இந்த நேரத்தில்தான் தாங்கள் விரும்பும் நபரிடம் சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், ஜோதிட சாஸ்திரத்தின் படி, கீழ்கண்ட ராசிகளுக்கு இந்த காதலர் தினம் அவ்வளவு சிறப்பாக அமையாது. அந்த ராசிகள் என்னென்ன என்று பார்ப்போம்...

26
Zodiac Signs Struggle with Love

மேஷ ராசி:

ஜோதிடத்தின் படி, மேஷ ராசிக்காரர்கள் பிப்ரவரி 14க்கு முன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காதலியிடம் அல்லது காதலனிடம் சரியான உறவைப் பேணுவது மிக முக்கியம். தேவையில்லாத விஷயங்களில் சிக்கிக் கொள்ள கூடாது. உறவில் விரிசல் ஏற்படும் அளவுக்கு விஷயங்களை எடுத்துச் செல்லக் கூடாது. எனவே தேவையில்லாத விஷயங்களுக்கு சண்டை போடாமல் அமைதியாக இருப்பது நல்லது. உறவைப் பேணுவதற்கு முயற்சி தேவை. உங்கள் காதலியை அல்லது காதலனை கேட்காமல் எந்த முடிவையும் எடுக்காதீர்கள். அவர்களின் பேச்சுக்கு பதில் சொல்லப் போகாதீர்கள்.

36
Love Horoscope

சிம்ம ராசி:

சிம்ம ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையும் ஆபத்தில் உள்ளது. ஒரு சிறிய தவறு காரணமாக உறவு முறிந்து போக வாய்ப்புள்ளது. தேவையில்லாத சர்ச்சைகளில் ஈடுபடாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். காதல் உணர்வைத் தொடர வேண்டும். காதலர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். காதலன் அல்லது காதலனின் பேச்சுக்கு முதலில் மதிப்பு கொடுப்பது நல்லது. அவர்களின் சிறிய ஆசைகளை நிறைவேற்றுங்கள். உங்கள் காதலியை காதலனைப் பாராட்டும் வகையில் பயணம் அல்லது மெழுகுவர்த்தி வெளிச்ச இரவு உணவு போன்றவற்றைச் செய்யுங்கள். இது உங்கள் இருவரின் உறவையும் மேம்படுத்த உதவும். 

46
Zodiac Signs Struggle with Love

துலாம் ராசி:

இந்த ராசிக்காரர்கள் பிப்ரவரி 14 வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காதலியிடம் அல்லது காதலனிடம் நேர்மறையாகப் பேசுவது மிக முக்கியம். உங்கள் பேச்சு உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும். இருவருக்கும் இடையேயான உறவு ரொம்பவே அவசியம். பிப்ரவரி 14 க்கு முந்தைய சில நாட்கள் காதலர்களுக்கு நல்லதாக இல்லை. காதர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்து செல்ல வாய்ப்புள்ளது.  

56
Zodiac signs who should be careful in love

விருச்சிக ராசி:

விருச்சிக ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையும் அவ்வளவு சிறப்பாக இருக்காது. உறவில் தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படலாம். காதலியிடம் அல்லது காதலனிடம் பேசுவது மிகவும் அவசியம். உங்கள் உறவை வலுப்படுத்த அதிகமாகப் பேச வேண்டும். காதலர்கள் அதிக நேரம் செலவிட வேண்டும். உங்கள் காதலிக்கு அல்லது காதலனுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

66
Love Zodiac Signs

மீன ராசி:

காதலைப் பொறுத்த வரையில் இந்த மாதம் மீன ராசிக்கு சாதகமாக இல்லை. இந்த மாதம் மீன ராசியினர் காதல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பிப்ரவரி 14க்கு முன் காதலர்களிடையே சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் காதலன் அல்லது காதலியிடம் நல்ல உறவைப் பேண முயற்சி செய்யுங்கள். தேவையில்லாத வம்புகளில் ஈடுபடாதீர்கள். அவர்களின் அனுமதியின்றி எந்த முடிவையும் எடுக்காதீர்கள். உங்கள் வார்த்தைகளைப் பற்றி சிறப்பு கவனம் செலுத்துங்கள். சண்டைக்கு வழிவகுக்கும் எந்த வார்த்தையையும் பேசாதீர்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories