கும்ப ராசியில் உதயமாகும் புதன் பகவான்.! தடைகள் நீங்கி, வாழ்வில் புதிய வெற்றிகளைப் பெறப்போகும் 4 ராசிகள்.!

Published : Mar 09, 2026, 11:03 AM IST

Mercury Rise In Aquarius 2026 : விரைவில் புதன் பகவான் கும்ப ராசியில் உதயமாக இருக்கிறார். இது சில ராசிகளுக்கு தடைகளை நீக்கி, வாழ்வில் புதிய வெற்றிகளை கொண்டுவர இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
16
Mercury Rise In Aquarius 2026

வேத ஜோதிடத்தில் புதன் பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். கிரகங்களின் இளவரசனான இவர் சந்திரனுக்கு அடுத்தபடியாக குறுகிய நாட்களில் தனது ராசியை மாற்றக்கூடியவர். மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியாக விளங்கி வரும் இவர் வணிகம், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரகராக விளங்கி வருகிறார். தற்போது கும்ப ராசியில் அஸ்தமன நிலையில் புதன் பகவான் பயணித்து வருகிறார்.

26
புதன் உதயத்தால் பலன்பெறும் ராசிகள்

ஒரு கிரகம் அஸ்தமன நிலையில் இருக்கும்பொழுது அதனுடைய பலம் முழுமையாக வெளிப்படாது. இந்த நிலையில் மார்ச் 14ஆம் தேதி புதன் பகவான் கும்ப ராசியில் உதயமாக இருக்கிறார். அவரது உதயமானது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புதிய தொடக்கங்களை கொண்டு வரும். வணிகத்தில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு திறன், சிந்தனை திறன், பகுப்பாய்வுத் திறன்கள் உயரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். புதன் பகவான் உதயத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

36
கும்பம்

கும்ப ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் புதன் பகவான் உதயமாகவுள்ளார். இதன் காரணமாக கும்ப ராசிக்காரர்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வெற்றி பெறும். நிதி ரீதியான பல நன்மைகள் கிடைக்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத வளர்ச்சி உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி நல்ல வளர்ச்சியையும், ஏற்றத்தையும் காண்பீர்கள்.

46
ரிஷபம்

ரிஷப ராசியின் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் புதன் பகவான் உதயமாக இருக்கிறார். இதன் காரணமாக நீண்ட நாள் நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். தொழில் செய்து வருபவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வாடகை கட்டிடத்தில் தொழில் செய்து வருபவர்கள் சொந்த கட்டிடத்திற்கு மாறுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

56
மகரம்

மகர ராசியின் இரண்டாம் வீட்டில் புதன் பகவான் உதயமாக இருக்கிறார். இது தன ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது இதன் காரணமாக மகர ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியும். சிறிய அளவில் தொழில் செய்து வருபவர்கள் தொழிலை பெரிய அளவில் விரிவாக்கம் செய்வீர்கள். வணிகத்திற்கு தேவையான கடன் உதவி கிடைக்கும். வேலையில்லாமல் தவித்து வரும் பட்டதாரி இளைஞர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். நேர்காணல் முடித்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் பேச்சாற்றல் மூலம் கடினமான வேலைகளையும் திறம்பட முடிப்பீர்கள்.

66
மிதுனம்

மிதுன ராசியின் ஒன்பதாவது வீட்டில் புதன் பகவான் உதயமாக இருக்கிறார். இது பாக்கிய ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தொழிலில் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். வேலையில் இருந்த மன அழுத்தங்கள் குறையும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பணி புரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் திறக்கப்படும். உபரி வருமானங்கள் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான யோகம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். தொழிலில் எதிரிகள் விலகுவார்கள். போட்டி பொறாமைகள் குறையும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories