Mercury Transit 2026: சொந்த வீட்டுக்கு வரும் புதன் பகவான்! இந்த 3 ராசிகளுக்கு பக்கம் அதிர்ஷ்டக் காற்று! பணமழை கொட்டப்போகுதாம்!

Published : May 25, 2026, 07:12 AM IST

Budhan Peyarchi 2026: ஒரு கிரகம் தனது சொந்த வீட்டிற்குள் நுழையும் போது அதன் ஆற்றல் பலமடங்கு அதிகரிக்கும். அந்த வகையில் மிதுன ராசிக்குள் நிகழும் இந்த புதன் பெயர்ச்சி அனைத்து ராசிகளையுமே பாதித்தாலும், குறிப்பாக 3 ராசிகளுக்கு அதிஷ்டம்.

PREV
15
புதன் பகவான்

ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களின் "இளவரசன்" என்று அழைக்கப்படுபவர் புதன் பகவான். மனிதனின் மூளை, அறிவுத்திறன், மற்றும் பேசும் ஆற்றலைத் தீர்மானிப்பதில் இவருக்கு நிகர் இவரே. ஜாதகத்தில் புதன் பலமாக இருந்தால், அந்த நபர் மிகச்சிறந்த புத்திசாலி மற்றும் சாதுரியம் மிக்கவராகவும் விளங்குவார். இப்படிப்பட்ட புதன் பகவான் வரும் மே 29 அன்று ரிஷப ராசியிலிருந்து விடைபெற்றுத் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நுழைகிறார்.

25
மிகப்பெரிய அதிஷ்டத்தை கொடுக்கப்போகும் 3 ராசிகள்

ஒரு கிரகம் தனது சொந்த வீட்டிற்குள் நுழையும் போது அதன் ஆற்றல் பலமடங்கு அதிகரிக்கும். அந்த வகையில் மிதுன ராசிக்குள் நிகழும் இந்த புதன் பெயர்ச்சி அனைத்து ராசிகளையுமே பாதித்தாலும், குறிப்பாக 3 ராசிக்காரர்களின் வாழ்வில் மிகப்பெரிய அதிஷ்டத்தை கொட்டிக்கொடுக்கப்போகிறது. தொழில், பணம் மற்றும் அந்தஸ்தில் அசுர வளர்ச்சியைப் பெறப்போகும் அந்த 3 அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என்று என்பதை பார்க்கலாம்.

35
மிதுனம் - பேச்சால் சாதிக்கும் பொற்காலம்

மிதுன ராசியின் அதிபதியான புதன் பகவான், உங்களது ராசியின் முதல் வீடான லக்ன வீட்டிற்குள் பிரவேசிக்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களது மூளை அசுர வேகத்தில் வேலை செய்யும். உங்களது சிந்தனைத் திறனும், சாதுரியமும் கூர்மைகாகவும் இருக்கும். நீங்கள் எடுக்கும் மிகச்சிறிய முடிவுகள் கூட எதிர்காலத்தில் கோடிக்கணக்கில் லாபத்தை வாரி வழங்கலாம். உத்தியோகம் மற்றும் வியாபார கூட்டங்களில் உங்களது பேச்சு திறமையால் மற்றவர்களை எளிதில் கவர்ந்து, பெரிய ஒப்பந்தங்களை தட்டிப்பறிப்பீர்கள்.

45
கன்னி - புதிய வேலை மற்றும் பூர்வீக சொத்து சேர்க்கை

கன்னி ராசிக்கும் அதிபதியாக விளங்கும் புதன் பகவான், இந்த பெயர்ச்சியின் மூலம் கன்னி ராசியினருக்குப் புதிய வாசல்களைத் திறந்து வைக்கிறார். அலுவலகத்தில் உங்களது திறமைக்கு ஏற்ற பாராட்டும், பதவி உயர்வும் தேடி வரும். பல மாதங்களாக தகுதியான நல்ல வேலை தேடிக்கொண்டிருந்த இளைஞர்களுக்கு, கைநிறைய சம்பளத்துடன் கூடிய வேலை அமையும். தந்தை வழியில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வருவது அல்லது அதன் மூலம் திடீர் பணமழை பொழிவது போன்ற சுப பலன்கள் உண்டாகும்.

55
துலாம் - அதிர்ஷ்டம் அள்ளும் பாக்கிய ஸ்தானம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி 9-ஆம் வீடான 'பாக்ய ஸ்தானத்தில்' நிகழ்கிறது. இது உங்களுக்குப் பொன்னான காலகட்டமாகும். அரசு வழியில் இருந்த முட்டுக்கட்டைகள், வழக்குகளால் முடங்கியிருந்த சொத்துக்கள் மற்றும் பணப் பற்றாக்குறையால் பாதியில் நின்ற சுபகாரியங்கள் அனைத்தும் இந்த பெயர்ச்சிக்குப் பின் தடையின்றி வெற்றிகரமாக முடியும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைப்பதால், எதிர்பாராத வழிகளில் திடீர் பண வரவு உண்டாகும். குறிப்பாகச் ஷேர் மார்க்கெட் , லாட்டரி அல்லது பழைய முதலீடுகள் மூலம் உங்களுக்குப் பலமடங்கு லாபம் கைக்கு வந்து சேரும்.

Read more Photos on
click me!

Recommended Stories