Mercury Combust in Cancer 2025 Palan : கடக ராசியில் புதன் அஸ்தமனம் ஆன நிலையில் இந்த 5 ராசியினர் வாழ்க்கையில் என்ன என்ன மாற்றங்கள் நிகழும் என்பது பற்றி பார்க்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தில், ஒரு கிரகம் "அஸ்தமனம்" என்பது கிரகம் பலவீனமடைவதைக் குறிக்கும். அதாவது, சூரியனுக்கு மிக அருகில் கிரகம் வரும்போது அதன் ஒளியை இழந்து பலவீனமடைவதைக் குறிக்கும். கிரகங்கள் சூரியனுக்கு மிக நெருக்கமாக இருக்கும்போது, சூரியனின் பிரகாசமான ஒளியால் அவற்றின் ஆற்றலும், பலன்களும் மறைக்கப்படுகின்றன. இதனால் அந்த கிரகத்தின் காரகத்துவங்கள் பலவீனமாக இருக்கும்.
28
புதன் அஸ்தமனம்: 5 ராசிகளுக்கு வாழ்க்கை மாற போகுது!
இதன் காரணமாக அந்த கிரகத்தால் நல்ல பலன்களை கொடுக்க முடிவதில்லை. அப்படி புதன் பகவான் ஜூலை 24ஆம் தேதி நேற்று கடக ராசியில் அஸ்தமனமான நிலையில் குறிப்பிட்ட ராசிகளுக்கு வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. புதனின் அஸ்தமனம் ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரையில் கடக ராசியில் அஸ்தமன நிலையிலேயே இருக்கும். அதன் பிறகு மீண்டும் உதயமாகி தனது முழு பலனையும் அளிக்கும்.
38
புதன் அஸ்தமனம்
பொதுவாகவே கல்வி, அறிவு, வேலை, தொழில், வியாபாரம் ஆகியவற்றிற்கு காரக கிரகமாக விளங்குவது புதன் பகவான். ஜாதகத்தில் புதன் இருக்கும் இடத்தை வைத்து அவர் என்ன வேலை செய்வார், என்ன படிப்பார் என்று தீர்மானிக்கப்படுகிறது. படிப்பது ஒன்ராக இருக்கும் ஆனால், அவர் வேலை பார்ப்பது ஒன்றாக இருக்கும். இதற்கு காரணம் புதன் பகவான் தான்.
48
மிதுன ராசிக்கான புதன் அஸ்தமனம் பலன்கள்:
புதன் கிரகம் ஆகஸ்ட் மாதத்தில் கடக ராசியில் அஸ்தமனமாக இருப்பதால், 5 ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ போகிறது. மிதுன ராசிக்காரர்கள் புதன் அஸ்தமன காலத்தில் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். எதிர்பாராத விதமாக செலவுகள் அதிகரிக்கலாம். குடும்பத்தில் யாருக்காவது உடல்நலக் குறைவு ஏற்படலாம். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.
58
கடக ராசிக்கான புதன் அஸ்தமன பலன்கள்:
கடக ராசிக்காரர்களுக்கு இதுவரை புத ஆதித்ய யோகம் பலன் அளித்து வந்தது. ஆனால், புதன் அஸ்தமன நிலையால் புதனின் பலம் குறையும். இதனால், அரசு சார்ந்த பணிகள் தடைபடலாம். தன்னம்பிக்கை குறையலாம். எதிரிகள் சதி செய்யவும், உங்கள் மானத்திற்கு பங்கம் விளைவிக்கவும் முயற்சி செய்யலாம். உங்கள் வசதிகள் குறையலாம்
68
கன்னி ராசிக்கான புதன் அஸ்தமன பலன்கள்:
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் லாப ஸ்தானத்தில் அமர்கிறார். பணம் பெற கூடுதல் உழைப்பு தேவைப்படலாம். எதிர்பார்த்த பலன்கள் கிடைக்க சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். திருப்தியை கடைபிடியுங்கள். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருங்கள். விரும்பிய வெற்றியைப் பெற சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
78
விருச்சிக ராசிக்கான புதன் அஸ்தமன பலன்கள்:
விருச்சிக ராசிக்காரர்கள் புதன் அஸ்தமன காலத்தில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சராசரி பலன்களே கிடைக்க வாய்ப்புள்ளது. தந்தையுடனான உறவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். வியாபார முடிவுகளை கவனமாக எடுங்கள்.
88
மகரம் ராசிக்கான புதன் அஸ்தமன பலன்கள்:
மகர ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் புதன் அஸ்தமனம் பிரச்சனைகளை உருவாக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், புத்திசாலித்தனமாகப் பேசுங்கள். கூட்டுத் தொழில் செய்தால், முக்கிய முடிவுகளில் உங்கள் பங்களிப்பைத் தொடரலாம்