Birth Date: இந்த தேதிகளில் பிறந்த ஆண்கள் மனைவிகளை அடக்கி ஆள்வார்களாம்.! குடும்பத்துக்கு இவங்க தான் Biggboss.!

Published : Oct 07, 2025, 03:31 PM IST

Numerology: எண் கணிதத்தின் படி குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்த ஆண்கள், மனைவி மீது அதிக ஆதிக்கம் செலுத்தும் கணவர்களாக இருப்பார்களாம். அந்த எண்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
16
அதிக ஆதிக்கம் செலுத்தும் ஆண்கள்

எண் கணிதம் என்பது ஒரு நபரின் பிறந்த தேதி, பெயர் மற்றும் எண்கள் அடிப்படையில் அவர்களின் ஆளுமை பண்புகள், குணாதிசயங்கள் மற்றும் வாழ்க்கையை புரிந்து கொள்ள உதவும் ஒரு ஜோதிட முறையாகும். எண் கணிதத்தின்படி குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த ஆண்கள் மனைவியை அடக்கி ஆளும் கணவர்களாக இருப்பார்களாம். அந்த தேதிகள் என்ன? அதற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26
வாழ்க்கைப் பாதை எண்ணை கணக்கிடுவது எப்படி?

எண் கணிதத்தில் ஒருவரின் பிறந்த தேதியை ஒற்றை இலக்கமாக குறைப்பதன் மூலம் அவர்களின் ‘வாழ்க்கைப் பாதை எண்’ கணக்கிடப்படுகிறது. இந்த எண் ஒரு நபரின் ஆளுமை, குணங்கள், பலவீனங்கள், உறவுகளில் அவர்கள் நடந்து கொள்ளும் நடத்தை ஆகியவற்றைப் பற்றி கூறுகிறது. உதாரணமாக ஜனவரி 5, 1980 அன்று ஒருவர் பிறந்திருந்தால் அவர்களின் வாழ்க்கைப் பாதை எண்ணை கீழ்கண்டவாறு கணக்கிட வேண்டும்.

1+5+1+9+8+0=24

2+4=6

இந்த தேதியில் பிறந்தவரின் வாழ்க்கைப் பாதை எண் 6. ஒவ்வொரு எண்ணும் தனித்துவமான குணங்களை கொண்டிருக்கிறது. சில எண்கள் ஆதிக்கம் செலுத்தும் அல்லது மற்றவர்களை வழி நடத்தும் தன்மையுடன் தொடர்பு கொண்டது. நியூமராலஜி படி குறிப்பிட்ட வாழ்க்கைப் பாதை எண்ணை கொண்ட ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கணவர்களாக இருப்பார்கள் அந்த எண்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

36
வாழ்க்கை பாதை எண் 1
  • எந்த மாதமாக இருந்தாலும் 1,10, 19 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே தலைமைப் பண்புகளை கொண்டிருப்பார்கள். 
  • இவர்கள் இயற்கையாகவே தலைவர்களாகவும், முன் முயற்சி எடுப்பவர்களாகவும், சிறந்த முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 
  • இவர்கள் தங்கள் குடும்பத்தின் முழுக் கட்டுப்பாட்டை வைத்திருக்க விரும்புவார்கள். தங்கள் மனைவியிடம் நல்ல கருத்துக்களை வலியுறுத்துவார்கள். 
  • குடும்ப முடிவுகளில் தங்கள் முடிவே இறுதியாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். 
  • இவர்களின் ஆதிக்க மனப்பான்மை என்பது அதீத அன்பு மற்றும் பாதுகாப்பு உணர்வு காரணமாக ஏற்படுகிறது.
46
வாழ்க்கைப் பாதை எண் 4
  • எந்த மாதமாக இருந்தாலும் 4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒழுக்கமானவர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் நிலைத்தன்மையை விரும்புபவர்கள். 
  • இவர்கள் தங்கள் குடும்பத்திற்கு கண்டிப்பான விதிமுறைகளை அமல்படுத்துவார்கள். 
  • இவர்கள் வீட்டில் ஒரு பாஸ் போல நடந்து கொள்வார்கள். 
  • குறிப்பாக குடும்ப நிர்வாகம் அல்லது பொறுப்புகளைப் பற்றி பேசும் பொழுது மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். 
  • இவர்களின் ஆதிக்கம் பெரும்பாலும் குடும்ப நலனை மையப்படுத்தியே இருக்கும்.
56
வாழ்க்கை பாதை எண் 8
  • எந்த மாதமாக இருந்தாலும் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் லட்சியவாதிகளாகவும், வெற்றிக்காக உழைப்பவர்களாகவும் இருப்பார்கள். 
  • இவர்கள் அதிகாரத்தை விரும்புவார்களாக இருக்கின்றனர். 
  • தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மற்றவர்களை வழிநடத்த விரும்புவார்கள். 
  • குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க விரும்புவார்கள். 
  • மனைவி தங்கள் கட்டளைகளை பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். 
  • இவர்களின் ஆதிக்கம் சில சமயங்களில் கடுமையாகத் தோன்றலாம்.
66
வழிகாட்டி மட்டுமே
  • எண் கணிதத்தின் படி “ஆதிக்கம் செலுத்தும் ஆண்கள்” என்கிற வார்த்தை எதிர்மறையாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. 
  • ஆண்கள் தங்கள் குடும்பத்தை பாதுகாக்கவும், வழி நடத்தவும், நிலையான வாழ்க்கையை உறுதி செய்யவும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். 
  • இது அவர்களின் அன்பு, பொறுப்பு மற்றும் கவனிப்பின் வெளிப்பாடாக இருக்கலாம். இவர்கள் தங்கள் மனைவியின் மகிழ்ச்சிக்காக சில முடிவுகளை எடுக்கலாம். ஆனால் அது கட்டுப்பாடு போலத் தோன்றலாம். 
  • நியூமராலஜி ஒரு வழிகாட்டி என்றாலும் ஒரு நபரின் ஆளுமையை பிறந்த தேதி மட்டுமே முழுமையாக தீர்மானிக்காது. அவர்கள் வளர்ந்த விதம், குடும்பப் பின்னணி, கலாச்சாரம், கல்வி, வாழ்க்கை முறை மற்றும் அனுபவங்கள் ஒரு நபரின் நடத்தையை பெரிதும் பாதிக்கின்றன
  • எனவே இந்த கட்டுரையை ஒரு வழிகாட்டியாக மட்டுமே பார்க்க வேண்டும். உறவுகளில் பரஸ்பரம் மரியாதை மற்றும் புரிதலை முதன்மைப்படுத்துவது மிகவும் முக்கியம்.
     

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories