Birth Month : பெண்களே! இந்த 3 மாதத்தில் பிறந்த ஆண்கள் கிட்ட கவனமா இருங்க; மனசை திருடிடுவாங்க

Published : Sep 13, 2025, 06:43 PM IST

ஜோதிடத்தின்படி, சில குறிப்பிட்ட மாதத்தில் பிறந்த ஆண்கள் பிறரை விட ரொம்பவே வசீகரமானவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் யார் யார் என்று இங்கு பார்க்கலாம்.

PREV
14
Charismatic Men by Birth Month

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் வசீகரிப்பிற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக அந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் எங்கு சென்றாலும் பிறரது கவனத்தை உடனே ஈர்க்க கூடியவர்களாக இருப்பார்களாம். இவர்களின் இந்த வசீகரிப்பின் தோற்றத்தால் பல பெண்களின் இதயத்தை சுலபமாக கொள்ளையடித்து விடுவார்களாம். இந்த பதிவில் அது எந்தெந்த மாதம் என்று பார்க்கலாம்.

24
மார்ச்

ஜோதிடத்தின் படி, மார்ச் மாதத்தில் பிறந்த ஆண்கள் வசீகரத்திற்கு பெயர் பெற்றவர்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களின் வசீகரம் வெளிப்படையாக இருக்காது. ஆனால் அமைதியாகவும், ஆழமாகவும் இருக்கும். பிறரை ஆழமாக பார்க்கும் இவர்களது திறமையால் எளிதாக மக்களை ஈர்த்து விடுவார்கள். இவர்களிடம் இருக்கும் தனித்துவமான புத்திக் கூர்மை, ஆழமான உணர்வுகளால் அனைவரும் ஈர்க்கப்படுவார்களாம். இதனால்தான் என்னவோ இவர்களை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் இவர்கள் பின்னாலேயே செல்வார்களாம்.

34
ஜூன்

ஜோதிடத்தின் படி, ஜூன் மாதத்தில் பிறந்த ஆண்கள் வசீகரம் மற்றும் அன்பின் கிரகமான சுக்கிர பகவானால் ஆளப்படுவார்கள். இயற்கையாகவே இவர்கள் வசீகரம் கொண்டுள்ளதால், இவரது வசிகரத்தை பிறர் புறக்கணிக்கவே மாட்டார்கள். இவர்களிடம் இருக்கும் கம்பீரமான தோற்றம் மற்றவர்களின் கவனத்தை சிரமம் இல்லாமல் ஈர்த்து விடுவார்கள். மேலும் இவர்களிடம் இருக்கும் பேச்சு திறமையால் யாரையும் ரொம்பவே முக்கியமான நபராக உணர வைக்க முடியும்.

44
அக்டோபர்

ஜோதிடத்தின் படி, அக்டோபர் மாதத்தில் பிறந்த ஆண்கள் சூரிய கிரக நாள் ஆளப்படும்கிறார்கள். இயற்கையாகவே இவர்கள் வசீகரமான தோற்றத்தை கொண்டிருப்பார்கள். இவர்கள் பிறரது தேவைகளை கேட்கும் குணம் உள்ளவர்கள். இவர்களின் கண்ணியமான நடத்தை அவர்கள் சுற்றியுள்ள அனைவர்களையும் மகிழ்ச்சியாக உணர வைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories