Nov 07 Today Rasi Palan: மீன ராசி நேயர்களே, இன்று அதிர்ஷ்ட காற்று வீசும்.! வெற்றி உங்கள் பக்கம் தான்.!

Published : Nov 06, 2025, 03:34 PM IST

Today Rasi Palan: நவம்பர் 07, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
நவம்பர் 07, 2025 மீன ராசிக்கான பலன்கள்:

மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் தெளிவான முடிவுகளையும், உறவுகளில் நல்லிணக்கத்தையும் தரக்கூடிய நாளாக இருக்கும். இன்று தன்னம்பிக்கை உயரும். அவசர முடிவுகளை தவிர்த்து தெளிவான சிந்தனையுடன் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வேலையில் உங்கள் படைப்பாற்றல் சிறப்பாக இருக்கும். திட்டமிட்ட இலக்குகளை அடைவதில் முன்னேற்றம் காண்பீர்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்.

நிதி நிலைமை:

நிதி நிலைமை இன்று சீராக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சேமிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். வரவு செலவு கணக்கை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். அதிகப்படியான செலவுகளை தவிர்க்கவும். கடன் வாங்குதல் கூடாது. தொழில் மற்றும் வர்த்தகத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனத்துடன் இருப்பது நல்லது.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று காதல் மற்றும் திருமண உறவுகளில் நல்லிணக்கம் நிலவும். அன்பானவர்களுடன் உறவு பலப்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருக்கும் பிரச்சனைகளை பேசிய சரி செய்வீர்கள். இதன் காரணமாக வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அமைதியான அணுகுமுறை புதிய நபர்களை ஈர்க்கக்கூடும். உணர்வுபூர்வமான விஷயங்களில் நிதானம் தேவை.

பரிகாரங்கள்:

இன்றைய தினம் மகாவிஷ்ணுவை மனதார வழிபடுங்கள். அருகில் உள்ள விஷ்ணு ஆலயங்களுக்கு சென்று துளசி, கற்கண்டு படைத்து அதை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குங்கள். வாயில்லா ஜீவன்களுக்கு உணவளியுங்கள். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது நேர்மறை பலன்களை அதிகரிக்கும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories