
Meena Rasi Sani Peyarchi 2025 Palan in Tamil : இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் சனி பகவான் 2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி மீன ராசிக்கு ஜென்ம சனியாக மாறுகிறது. இதுவரையில் விரையச் சனியாக இருந்த சனி பகவான் இப்போது மீன ராசியிலேயே இருந்து ஜென்ம சனியாக ஆட்சி செய்யப் போகிறார். இது மீன ராசிக்கு 50 சதவிகிதம் மட்டுமே நன்மை அளிக்கும். அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே அமைதியான குணம் கொண்ட மீன ராசிக்காரர்கள் இந்த சனி பெயர்ச்சி காலத்தில் ரொம்பவே பொறுமையாக இருக்க வேண்டும். உங்களது வேலையில் மட்டும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதோடு, வண்டி வாகனங்களில் எச்சரிக்கையுடன் சென்று வர வேண்டும். வேகத்தை குறைத்துக் கொண்டால் நன்மை அளிக்கும்.
பொருளாதாரம்:
ஏற்கனவே கடந்த இரண்டரை ஆண்டுகளாக உங்களது வருமானம் தொடர்ந்து விரையம் ஆன நிலையில் இப்போது நிதி பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும். கடன் மேல் கடன் வாங்க வேண்டி வரும். திருமணமாகாத இளைஞர்களாக இருந்தால், வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. இதுவே வேலைக்கு செல்பவராக இருந்தால் வீடு மற்றும் அலுவலகம் என்று இருந்தால் ஓரளவு நிதி பற்றாக்குறையை குறைக்கலாம்.
வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்க கற்றுக் கொள்ள வேண்டும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்கு மட்டும் கடன் வாங்க வேண்டும். சனி பகவான் உங்களது வாழ்க்கையின் பாடத்தை கற்றுக் கொடுப்பார். அவரிடம் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். உழைப்புக்கு ஏற்ப ஊதியம் கிடைக்கும்.
திருமணம்:
ஜென்ம சனி காலம் என்பதால் கணவன் மனைவிக்கிடையில் சண்டை சச்சரவு வந்து கொண்டே இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கோபம் அதிகரிக்கும். கோபத்தை குறைத்தால் பெரும்பாலும் சண்டைகள் குறையு. பேசும் போது வார்த்தையில் கவனமாக பேச வேஎண்டும். இதே போன்று தான் மகன் அல்லது மகளிடம் அன்பாக பேச வேண்டும். இல்லையென்றால் குடும்பத்திற்குள் குழப்பம் ஏற்படக் கூடும். எதிர்காலத்தை பற்றி சிந்தித்து அதை நோக்கி முன்னேறுங்கள். காதல் வாழ்க்கையிலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. காதலில் புரிதல் அவசியம்.
வேலை:
எந்த வேலையாக இருந்தாலும் கடினமாக உழைக்க வேண்டி வரும். உங்களது திறமையை வெளிப்படுத்தும் நேரம் இது. அலுவலகத்தில் சக பணியாளர்களாக பிரச்சனைகள் ஏற்படக் கூடும். உயர் அதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வேலைப்பளு அதிகரிக்கும். இதனால், மன அழுத்தம் ஏற்படக் கூடும். உங்களது முன்னேற்றம் தடைபடும். பொறுமையாக இருப்பது அவசியம். எந்த வேலை உங்களுக்கு செட் ஆகுமோ அதில் கவனம் செலுத்துங்கள். உங்களால் முடிக்க முடியும் வேலைகளை மட்டும் செய்யுங்கள்.
கல்வி:
படிப்பில் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். சந்தேகத்திற்கு ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அச்சத்தை தவிர்ப்பது நல்லது. கடினமாக முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சித்து படித்தால் வெற்றி கிடைக்கும். ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும். விடா முயற்சியுடன் படித்தால் சனி பகவான் உங்களுக்கு துணை நிற்பார்.
உடல் ஆரோக்கியம்:
மன அழுத்தம் ஏற்படக் கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள். நடைபயிற்சி கூட செய்யலாம். உடலுக்கு கேடு விளைவுக்கும் மது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பழங்கள், காய்கறிகள் அதிகளவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சிலருக்கு முதுகு பிரச்சனை வரலாம். முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.
காதல்:
காதல் வாழ்க்கையில் விரிசல் ஏற்படக் கூடும். புரிதல் வேண்டும். உண்மையான காதலுக்கு சனி பகவான் பச்சைக் கொடி காட்டுவார். அவர்களை சேர்த்து கூட வைப்பார். ஆனால், திருமணத்தை மீறிய உறவு வைத்திருப்பர்களை காட்டி கொடுத்துவிடுவார். அதே நேரத்தில் அவர்களான தண்டனையையும் கொடுப்பார். கணவன் மனைவி உறவிலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உங்களது துணையிடம் எதையும் மறைக்காமல் அவர்களுக்கு உண்மையாக நடந்து கொள்ளுங்கள்.
எதிர்காலத்திற்கு என்ன தேவையோ அதில் கவனம் செலுத்துங்கள். காதல் உறவில் கவனமும், எச்சரிக்கையும் அவசியம். காதல் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஒருவரை பற்றி மற்றவர் நன்கு அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும். இருவருக்கும் இடையில் புரிதல் இருக்க வேண்டும். கருத்து வேறுபாட்டை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
* வாரந்தோறும் சனிக்கிழமையில் உடல் ஊனமுற்றோர்களுக்கு சாப்பாடு தானம் செய்ய வேண்டும்.
* சனிக்கிழமைகளில் விநாயகர், ஆஞ்சநேயர், சனி பகவானை வழிபாடு செய்ய வேண்டும்.
* சனிக்கிழமைகளில் துப்புரவு பணியாளர்களுக்கு காலணி, குடை, போர்வை போன்றவற்றை தானம் செய்யலாம்.
* ஏழை எளியோருக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.
* சனிக்கிழமை தோறும் மது மற்றும் அசை உணவை தவிர்த்து விரதம் இருந்து சனி பகவானை வழிபட வேண்டும்.
* பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுக்க வேண்டும்.