சுக்கிரன் பெயர்ச்சி – வசியம், காதல்காரகன் சுக்கிரன் அருள் கிடைக்க யாரெல்லாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

First Published | Nov 9, 2024, 7:50 AM IST

Venus Transit 2024 Palan in Tamil : சுக்கிரன் பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க…

Venus Transit Palan Tamil, Venus in Sagittarius

Venus Transit 2024 Palan in Tamil : பல்வேறு கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் ஒவ்வொரு கணமும் தங்கள் நிலைகளை மாற்றுகின்றன. இதன் தாக்கம் பல்வேறு ராசிகளில் விழுகிறது. நவம்பர் 7, 2024 அன்று காலை 3:39 மணிக்கு சுக்கிரன் தனுசு ராசிக்கு பெயர்ச்சியானார். டிசம்பர் 2 வரை தனுசு ராசியில் சுக்கிரன் இருப்பார். சுக்கிரன் பெயர்ச்சி மூன்று ராசிகளுக்கு கடினமாக இருக்கும். சாஸ்திரத்தின் படி, சுக்கிரன் பெயர்ச்சியால் மூன்று ராசிகளின் வாழ்க்கையில் துன்பங்கள் வரும். பட்டியலில் யார் இருக்கிறார்கள் என்று பாருங்கள். 

சாஸ்திரத்தின் படி, மிதுனம், தனுசு மற்றும் ரிஷப ராசிக்கு கடினமான நாட்கள் தொடங்குகின்றன. இந்த நேரத்தில் எல்லா இடங்களிலும் எச்சரிக்கையாக இருங்கள். இல்லையெனில் சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம். இப்போது சுக்கிரன் தனுசு ராசியில் பெயர்ச்சி ஆகியுள்ளார். நவம்பர் 7 முதல் டிசம்பர் 2 வரை தனுசு ராசியில் இருப்பார். இதன் தாக்கம் மூன்று ராசிகளில் விழும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். சில நாட்கள் எச்சரிக்கையாக இருந்தால் இந்த ஆபத்துகளில் இருந்து விடுபடலாம்.

Sukran Peyarchi 2024 Palan Tamil

ரிஷப ராசி

சுக்கிரன் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்கு கடினமான நாட்கள் தொடங்கும். நிதி சிக்கல்கள் ஏற்படும். அதேபோல் இந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை - அமைதியின்மை அதிகரிக்கும். இந்த நேரத்தில் பணியிடத்திலும் சிக்கல்கள் ஏற்படும்.

Tap to resize

Sukran Peyarchi 2024

மிதுன ராசி:

மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் கடினமான காலம் தொடங்கும். இந்த நேரத்தில் மன அழுத்தம் அதிகரிக்கலாம். அதேபோல் இந்த நேரத்தில் வயிற்று பிரச்சனையால் அவதிப்படலாம். இந்த நேரத்தில் துணையுடன் சண்டை வரலாம். அமைதியாக இருப்பது நல்லது. விட்டுக் கொடுத்து செல்வது அதைவிட நன்மை அளிக்கும். வேலையில் பதற்றம் நீடிக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Venus Transit 2024 Palan in Tamil

தனுசு ராசி:

தனுசு ராசிக்கு கடினமான நாட்கள் தொடங்குகின்றன. டிசம்பர் 2 வரை எச்சரிக்கையாக இருங்கள். இந்த நேரத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதேபோல் பணியிடத்தில் உயர் அதிகாரியுடன் மோதல் ஏற்படலாம். மௌனமாக இருந்துவிடுங்கள். வீண், வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும். பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காசு, பணம் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது.

Latest Videos

click me!