Mercury Transit: இன்னும் ஒருநாள் தான்! ஆட்டத்தை ஆரம்பிக்கப்போகும் புதன்! இந்த 3 ராசிகளுக்கு என்னென்ன நடக்கப்போகுது தெரியுமா?

Published : Jun 10, 2026, 07:25 AM IST

Astrology: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் 'இளவரசன்'  புதன் பகவான். இவர் தனது சொந்த வீடான மிதுன ராசியில் சஞ்சரித்து வருகிறார். இந்தச் சூழலில் ஜூன் 11-ம் தேதி அன்று புதன் பகவான் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்திற்குள் நுழைகிறார்.

PREV
15
கிரகங்களின் 'இளவரசன்' புதன் பகவான்

தற்போதை காலக்கட்டத்தில் பொதுமக்கள் ஜோதிடத்தை அதிகளவில் நம்பி வருகின்றனர். இன்றைய நாள் நமக்கு எப்படி அமையும் என்பதை காலையில் எழுந்ததும் காலண்டரில் இருக்கும் ராசி பலன் மற்றும் டிவியில் பார்த்து தெரிந்துகொள்கின்றனர். இந்நிலையில் ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் 'இளவரசன்' என்றும், புத்திசாலித்தனம், சாதுரிய பேச்சு, கல்வி மற்றும் தொழில் ஆகியவற்றின் அதிபதியாகவும் புதன் பகவான் கருதப்படுகிறார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், தனது நிலையை மாற்றும் போதெல்லாம் அதன் தாக்கம் 12 ராசிகளிலும் பெரிய அளவில் எதிரொலிக்கும்.

25
இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஏற்படப்போகும் மாற்றம்

அப்படிப்பட்ட புதன் பகவான் தனது சொந்த வீடான மிதுன ராசியில் சஞ்சரித்து வருகிறார். இந்தச் சூழலில், ஜூன் 11-ம் தேதி அன்று புதன் பகவான் குருவின் நட்சத்திரமான 'புனர்பூசம்' நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். வரும் ஜூலை 8-ம் தேதி வரை புதன் இதே நட்சத்திரத்தில் நீடிப்பார். பகைமை இல்லாத குருவின் நட்சத்திரத்திற்குள் புதன் செல்வது ஜோதிட ரீதியாக மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நட்சத்திர மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், குறிப்பாக 3 ராசிக்காரர்களின் வாழ்வில் பண மழையும், தொழிலில் அசுர வளர்ச்சியும் ஏற்படப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னென்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

Saturn Moon Conjunction 2026: பேராபத்து! இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்கள் ரொம்பவே உஷார்! எளிய பரிகாரங்கள் என்னென்ன?

35
மிதுன ராசி

புதனின் இந்த நட்சத்திர இடப்பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிக உன்னதமான பலன்களைத் தரப்போகிறது. மாணவர்கள் கல்வியில் புதிய உயரத்தைத் தொடுவார்கள். அரசு வேலைக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். நீங்கள் சிந்திய வியர்வைக்கும், உழைப்பிற்கும் இப்போது இரட்டிப்புப் பலன் கிடைக்கப்போகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகளும், மேல் அதிகாரிகளின் பாராட்டும் உங்களை தேடி வரும். நீண்ட நாட்களாக இருந்த மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

45
சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த புனர்பூச நட்சத்திர புதன், தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் வாரி வழங்குவார். தகவல் தொழில்நுட்ப துறையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத அதிரடி பண வரவு உண்டாகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்குப் பெரிய நிறுவனங்களில் இருந்து நல்ல சம்பளத்துடன் ஆஃபர் லெட்டர் வரும். உங்களின் முடிவெடுக்கும் திறன் மற்றும் ஆளுமைத் திறன் பல மடங்கு வலுவடையும்.

Kubera Blessings: பணப் பற்றாக்குறையே வராத 3 ராசிகள்! குபேரரின் ஆசியால் அள்ள அள்ளக் குறையாத செல்வம் சேரும்!

55
துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் சமூகத்தில் அந்தஸ்தையும், மதிப்பையும் உயர்த்தப்போகிறது. பொதுவாழ்வு மற்றும் அரசியலில் இருப்பவர்களின் செல்வாக்கு மக்கள் மத்தியில் பல மடங்கு உயரும். உங்களின் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்திப் புதிய தொழில் தொடங்கி அதில் குறுகிய காலத்திலேயே பெரும் லாபத்தைக் காண்பீர்கள். புதனின் அருளால் உங்களது பேச்சில் இனிமை கூடும். உங்களின் பேச்சாற்றால் எப்பேர்ப்பட்ட காரியத்தையும் சாதித்துக் காட்டுவீர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories