Chevvai Peyarchi 2025 rasi palangal: செவ்வாய் பகவான் விரைவில் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்திற்கு செல்ல இருக்கிறார். இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை வழங்க உள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
ஜோதிடத்தின் படி செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். ராசியை மட்டுமல்லாமல் அடிக்கடி நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். தற்போது செவ்வாய் பகவான் தனது சொந்த ராசியான விருச்சிகத்தில் இருக்கிறார். இந்த நிலையில் நவம்பர் 19 ஆம் தேதி அவர் புதன் பகவானுக்கு சொந்த நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்திற்குள் நுழைய இருக்கிறார்.
25
கேட்டை நட்சத்திரத்திற்கு செல்லும் செவ்வாய்
நவம்பர் 19, 2025 அன்று மாலை 7:40 மணிக்கு கேட்டை நட்சத்திரத்தில் பிரவேசித்து, டிசம்பர் 7, 2025 வரை அங்கேயே இருப்பார். கேட்டை நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் 18 வது நட்சத்திரமாக கருதப்படுகிறது. கிரகங்களின் தளபதியாக விளங்கும் செவ்வாய் பகவான், கிரகங்களின் இளவரசனாக விளங்கும் புதனின் நட்சத்திரத்திற்கு செல்வது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
35
துலாம்
செவ்வாய் பகவான் கேட்டை நட்சத்திரத்திற்குள் நுழைவது துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் இரண்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்க இருக்கிறார்.
எனவே துலாம் ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மேலும் சுக்கிர பகவான் லக்ன வீட்டில் மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குவதன் காரணமாக அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றைப் பெறுவீர்கள்.
திடீர் நிதி ஆதாயங்கள் உண்டாகும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் சிறப்பு நன்மைகளை பெறுவீர்கள்.
புதிய தொழிலை தொடங்க நினைப்பவர்கள் தொழிலை தொடங்குவீர்கள். ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
ஏற்கனவே லக்ன வீட்டில் வசிக்கும் செவ்வாய் பகவான் கேட்டை நட்சத்திரத்தில் நுழைவதன் காரணமாக விருச்சிக ராசிக்காரர்கள் சிறப்பு நன்மைகளைப் பெறுவீர்கள்.
தலைமைத்துவ திறன்கள் விரைவாக அதிகரிக்கும். இதன் காரணமாக வேலையில் புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படலாம். தன்னம்பிக்கை உயரும். கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
தொழில் மற்றும் வணிகத்தில் குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெறுவீர்கள். செவ்வாயின் பார்வை ஏழாம் வீட்டில் விழுவதன் விளைவாக அரசு சார்ந்த துறைகளில் வெற்றியைப் பெறுவீர்கள்.
நீண்ட கால உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். சொத்து, வாகனம் ஆகியவற்றை வாங்கும் கனவு நனவாகும்.
55
மீனம்
செவ்வாய் கேட்டை நட்சத்திரத்தில் நுழைவது மீன ராசியில் பிறந்தவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த ராசிக்கு செவ்வாய் அதிர்ஷ்ட வீட்டில் பெயர்ச்சியாக இருக்கிறார்.
ஏற்கனவே ருச்சக, ஆதித்ய மங்கள, திரிகிரக யோகங்கள் ஆகியவையும் உருவாவதன் காரணமாக மீன ராசிக்காரர்கள் அளவில்லாத நன்மைகளை அனுபவிப்பீர்கள்.
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.
வேலையில் இருப்பவர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமாக இருக்கும்.
புதிய வேலை தேடுபவர்கள் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வியாபாரத்திலும் லாபம் கூடும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)