ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் தளபதியாக போற்றப்படும் செவ்வாய் பகவான், வீரம், துணிச்சல், தன்னம்பிக்கை மற்றும் தலைமைப் பண்பிற்கு உரிய காரணியாகத் விளங்குகிறார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய், பொதுவாக ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் வரை சஞ்சாரம் செய்வார். இந்த காலக்கட்டத்தில் அவர் தனது நட்சத்திரத்தையும் அவ்வப்போது மாற்றிக் கொள்வதுண்டு. கிரகங்களின் இந்த சுற்றுப்பயண மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில், அக்டோபர் 17 அன்று ஆயில்யம் நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ள செவ்வாய் பகவான், வரும் நவம்பர் 12 வரை அதே நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். செவ்வாயின் இந்த நட்சத்திர இடமாற்றம் ஜோதிட ரீதியில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே எதிரொலித்தாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மட்டும் தொழில் ரீதியான முன்னேற்றமும், எதிர்பாராத பண வரவும் கிடைக்கப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து பார்ப்போம்.