கடகத்தில் செவ்வாய் – அடுத்த 2 மாசத்துக்கு நீங்கள் தான் கோடீஸ்வரன், வண்டி, வாகனம் வாங்கலாம்!

Mars Transit 2025 in Cancer Top 4 Lucky Zodiac Signs in Tamil : ஏப்ரல் 3ஆம் தேதியான இன்று செவ்வாய் பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்த நிலையில் செவ்வாய் பகவானின் அருளால் இந்த 4 முக்கிய ராசிகளின் வாழ்க்கையில் செல்வ செழிப்பு உண்டாகும். அந்த ராசியினர் யார் யார் என்று தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய் பெயர்ச்சி 2025

Mars Transit 2025 in Cancer Top 4 Lucky Zodiac Signs in Tamil : செவ்வாய் பகவான் ஒவ்வொரு 45 நாட்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகக் கூடியவர். நிலம், வீடு, வண்டி, வாகனம் ஆகியவற்றிற்கு காரகன். இவரை பூமிக்காரகன் என்றும் அழைப்பது உண்டு. இவரது அருள் இருந்தால் சொந்தமாக நிலமும் வாங்கலாம், வீடும் வாங்கலாம். மேலும், சகோதரன், சகோதரி உறவு பற்றி பேசக் கூடியவர் தான் இந்த செவ்வாய். அதாவது ரத்த உறவு சம்பந்தப்பட்டவர். ஜாதகத்தில் 8ஆவது இடத்தில் செவ்வாய் பகவான் இருந்தால் செவ்வாய் தோஷம் என்பார்கள். வலிமையான கிரகம் என்றும் கூட சொல்லலாம்.

கடகத்தில் செவ்வாய் பெயர்ச்சி 2025

இப்படிப்பட்ட செவ்வாய் பகவான் இன்று ஏப்ரல் 3ஆம் தேதி அதிகாலை 1.42 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியானது. இந்த பெயர்ச்சி வரும் ஜூன் 7ஆம் தேதி வரையில் கடக ராசியில் நீடிக்கும். அதன் பிறகு கடகத்திலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகும். கடகத்தில் செவ்வாய் பகவானின் சஞ்சாரம் காரணமாக 12 ராசிகளில் குறிப்பிட்ட ராசிகளுக்கு செவ்வாய் பகவானின் அருள் கிடைத்து செல்வ, செழிப்பு உண்டாகும். அந்த ராசிக்காரர்கள் யார் யார்? என்ன பலன் உண்டாகும் என்பது பற்றி தெளிவாக பார்க்கலாம்.


கடகம் ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்

கடக ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சி அடைந்த நிலையில், செவ்வாய் பகவானின் முழு பலனும் உங்களுக்கு கிடைக்க போகிறது. மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நிலம், வீடு கூட வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட கால நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உங்களது வசதி வாய்ப்பு பெருகும். அடுத்த 2 மாதங்களுக்கு நீங்கள் தான் கோடீஸ்வரன். சொந்த தொழில் உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.

சிம்மம் ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்:

கடக ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சி அடைந்த நிலையில், சிம்மம் ராசிக்கு இருந்த பிரச்சனைகள் எல்லாம் தீர போகிறது. புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் தொடங்கலாம். வேலை மாற்றமும் செய்யலாம். புதிய வேலைகள் கிடைக்கும். சகோதர உறவு வலுப்பெறும். திருமண யோகமும் கூடி வரும். மே மாதத்திற்கு பிறகு குடும்பத்துடன் வெளியூர் அல்லது புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பூமி வாங்கும் யோகம் உண்டாகும். வண்டி, வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். அடுத்த 2 மாதங்களுக்கு உங்களது வாழ்க்கையில் வசந்தம் வீசும்.

கன்னி ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்:

செவ்வாய் அருளால் கன்னி ராசியினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். பல துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். வசதி வாய்ப்பு பெருகும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புகள் உண்டு. புதிய வேலைக்கு முயற்சிக்கலாம்.

ஒரே ராசியில் 5 கிரக சேர்க்கை – பஞ்சகிரக யோகத்தால் பாதிக்கப்படும் டாப் 5 ராசிகள்!
 

கும்பம் ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்:

செவ்வாயின் அருள் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். உங்களுக்கு அலுவலகத்தில் வெற்றி கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். எந்த வேலையாக இருந்தாலும் சரி எளிதில் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பல வழிகளிலிருந்து வருமானம் வந்து சேரும். வசதி வாய்ப்புகள் பெருகும். சமூகத்தில் உங்களுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.

ரிஷப ராசிக்கான ஏப்ரல் மாத ராசி பலன் – வேலையில் வெற்றி, வருமானம் டபுளாகும்!
 

Latest Videos

click me!