ரிஷப ராசிக்கான ஏப்ரல் மாத ராசி பலன் – வேலையில் வெற்றி, வருமானம் டபுளாகும்!

Published : Apr 01, 2025, 01:10 PM IST

April Month Rasi Palan Predictions for Taurus Zodiac Signs in Tamil : ஏப்ரல் மாதம் ரிஷப ராசியினருக்கு எந்த மாதிரியான பலனைத் தரும் என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம்.

PREV
14
ரிஷப ராசிக்கான ஏப்ரல் மாத ராசி பலன் – வேலையில் வெற்றி, வருமானம் டபுளாகும்!

April Month Rasi Palan Predictions for Taurus Zodiac Signs in Tamil : ஏப்ரல் மாதத்தைப் பொறுத்த வரையில் ரிஷப ராசியினருக்கு சாதகமாகத்தான் இருக்கும். மீன ராசியில் சூரியன், புதன், சுக்கிரன், சனி மற்றும் ராகு ஆகிய 5 கிரகங்களின் சேர்க்கையால் உருவான பஞ்சகிரஹி யோகத்தால் உங்களது வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக் கூடிய சனி பகவான் 4 கிரகங்களுடன் இணைந்து இருப்பதால், அலுவலகத்தில் கடினமாக உழைக்க வேண்டி வரும். அதிகப்படியான வேலையால் அவதிப்படும் நிலை உருவாகும்.

24
Horoscope, April Matha Rasi Palan, Jothidam

இருந்தாலும் கூட வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து வேலையை உரிய நேரத்தில் செய்து முடித்து அலுவலகத்தில் பாராட்டு பெறுவீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளில் கவனம் செலுத்த வேண்டி வரும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்த முடியாத சூழல் உருவாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் சண்டை சச்சரவுகள் வரலாம். பொறுமையை கடைபிடிப்பது நல்ல்து.

34
Taurus April Month Rasi Palan Tamil

குடும்பத்தில் உள்ளவர்களை புரிந்து கொண்டு நடக்க வேண்டும். ஏப்ரல் மாதத்தைப் பொறுத்த வரையில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். பல வழிகளிலிருந்து பணம் வந்து சேரும். முன்னோர்கள் சொத்துக்கள் கிடைக்கப் பெறும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கண், காது, வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். கவனமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருப்பது அவசியம்.

44
Astrology, April Matha Rasi Palan Tamil

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். இரட்டிப்பு லாபம் வரும். கூடவே செலவுகளும் அதிகரிக்கும். கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணை விஷயங்களில் எச்சரிக்கையும், கவனமும் தேவை.

ஒரே ராசியில் 5 கிரக சேர்க்கை – பஞ்சகிரக யோகத்தால் பாதிக்கப்படும் டாப் 5 ராசிகள்!
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories