Astrology: வக்ர நிலையை அடையும் செவ்வாய்.! 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் செம்ம அடி வாங்கப் போறீங்க.!

Published : Oct 21, 2025, 12:59 PM IST

Chevvai Vakra Peyarchi 2025: நவம்பர் 2025-ல் செவ்வாய் பகவான் வக்ரம் அடைய இருக்கிறார். இது ஜோதிட ரீதியாக முக்கியமான நிகழ்வாகும். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
17
செவ்வாய் வக்ரப் பெயர்ச்சி

ஜோதிடத்தின் படி கிரகங்களின் வக்ர நிலை என்பது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஒரு கிரகம் சூரியனுக்கு மிக அருகில் நகர்ந்து அதன் ஒளியை இழக்கும் பொழுது பிற்போக்கு இயக்கம் ஏற்படுகிறது. ஜோதிடத்தில் இதை வக்ர நிலை என்று கூறப்படுகிறது. அந்த வகையில் செவ்வாய் பகவான் நவம்பரில் தனது பிற்போக்கு இயக்கத்தை தொடங்குகிறது. இந்த இயக்கம் ஏழு மாதங்கள் நீடித்து மே 2 அன்று செவ்வாய் மீண்டும் ஒளியைப் பெற இருக்கிறது. செவ்வாயின் இந்த வக்ரப் பெயர்ச்சி சில ராசிகளுக்கு எதிர்பாராத நெருக்கடிகளை தரவுள்ளது. அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

27
செவ்வாய் வக்ரம் ஏற்படுத்தும் விளைவுகள்

செவ்வாய் பகவான் ஆற்றல், வீரம், துணிச்சல், செயல் மற்றும் கோபத்தை குறிக்கும் கிரகமாக அறியப்படுகிறார். இவரின் இந்த வக்ர பெயர்ச்சியானது காரியங்களில் தாமதம், கோபத்தை கட்டுப்படுத்துவதில் சிரமம், உறவுகளில் மோதல்கள், உடல் நலக்குறைவு மற்றும் நிதி சிக்கல்கள் போன்ற பொதுவான சிரமங்களை ஏற்படுத்தலாம். நவம்பர் 2025 செவ்வாய் கிரகம் எந்த ராசியில் வக்ரமடைகிறது என்பதைப் பொறுத்து அதன் தாக்கம் மாறுபடும். இருப்பினும் ஜோதிடத்தின் அடிப்படையில் இந்த வக்ரப் பெயர்ச்சியால் சவால்களை சந்திக்க வாய்ப்புள்ள ராசிகள் குறித்து பார்க்கலாம்.

37
மேஷம்
  • மேஷ ராசியை ஆட்சி செய்யும் கிரகமாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். அவரின் இந்த வக்ரப் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். 
  • மேஷ ராசியினர் அனைத்து வகையிலிருந்தும் நெருக்கடிகளை சந்திக்கலாம். இந்த சமயத்தில் அதிக கோபம், பதட்டம், நிதி சார்ந்த நெருக்கடிகள் ஆரோக்கியப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். 
  • நிதி சார்ந்த விஷயங்களிலும் பின்னடைவுகளை சந்திப்பீர்கள். உடல்நலக் கோளாறுகளால் பணம் விரயம் ஆகும். 
  • பயணம் செய்யும் பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் வாகனத்தை பயன்படுத்துபவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். 
  • சேமிப்பு மற்றும் முதலீடுகள் ஆகிய விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
47
ரிஷபம்
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் வக்ரம் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம். 
  • வீடு மற்றும் குடும்ப வாழ்க்கையை குறிக்கும் வீடுகளில் செவ்வாய் வக்ரம் அடையும் பொழுது வீட்டிற்குள் சண்டை, சச்சரவுகள், மோதல்கள் அல்லது வீடு மாற்றம் தொடர்பான சவால்கள் வரலாம். 
  • வீடு கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கும் சிக்கல்கள் ஏற்படலாம். 
  • குடும்பச் சூழ்நிலையில் உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காமல் போகலாம். 
  • எனவே குடும்பத்தினருடன் பேசும் பொழுது கவனத்துடன் இருப்பது, தெளிவாக பேசுவது, எல்லையை நிர்ணயிப்பது ஆகியவை அவசியம். 
  • மன அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லது.
57
கடகம்
  • கடக ராசிக்காரர்களுக்கும் செவ்வாயின் வக்ரப் பெயர்ச்சியானது பாதகமான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். 
  • ஏற்கனவே கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு நிலைமை மோசம் அடையக்கூடும். 
  • குடும்பம், வீடு, பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் சவால்களை கொண்டு வரலாம். 
  • குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள், மனக்குழப்பங்கள் அல்லது உணர்ச்சிரீதியான அழுத்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் தாமதம் ஏற்படலாம். 
  • உணர்ச்சிவசப்படுவதைக் குறைத்து கோபத்தைக் கட்டுப்படுத்துவது நன்மை தரும். 
  • குடும்ப உறவுகளில் பொறுமையை கடைப்பிடிப்பது ஆரோக்கியமான எல்லைகளை அமைப்பது ஆகியவை அவசியம்.
67
விருச்சிகம்
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் வக்ரப் பெயர்ச்சி பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். 
  • குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள், வேலையில் சிக்கல், வெளிநாடு தொடர்பான விஷயங்களில் காலதாமதம் ஏற்படலாம். 
  • தொழில் செய்து வருபவர்கள் இந்த காலக்கட்டத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கும் இந்த காலம் சவால்களை ஏற்படுத்தக்கூடும். 
  • படிப்பில் கவனம் செலுத்துவதில் சிரமம், கவனச் சிதறல்கள், தேர்வில் தோல்வி போன்றவை ஏற்படலாம். காதல் உறவில் இருப்பவர்களும் கவனத்துடன் நடக்க வேண்டும். 
  • பயணம் செய்வதற்கு முன்பாக ஒரு முறைக்கு இருமுறை சிந்திக்க வேண்டியது அவசியம். 
  • உடல் நலத்திலும் பின்னடைவு ஏற்படலாம் என்பதால், ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. வாகனம் ஓட்டுபவர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.
77
முக்கிய ஆலோசனை

செவ்வாயின் வக்ரம் என்பது கெட்ட நேரம் என்பது பொருள் கிடையாது. நம் செயல்பாடு, நாம் செய்யும் விஷயங்கள் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்ய கிடைக்கும் வாய்ப்பாக கருத வேண்டும். சவால்களை சமாளிப்பதற்கு சில ஆலோசனைகளைப் பின்பற்றலாம். 

புதிய திட்டங்களை தொடங்குவதை தவிர்ப்பது, ஏற்கனவே உள்ள பணிகளை சரி செய்வதில் கவனம் செலுத்துவது, சின்ன விஷயத்திற்கு கூட கோபம் கொள்ளாமல் இருப்பது, பொறுமையை கையாளுவது, அவசரமாக வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது, கூர்மையான ஆயுதங்கள் நெருப்புடன் கவனமாக இருப்பது, பழைய சண்டைகளை சரி செய்வது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் இந்த காலகட்டத்தை எளிதாக கடந்து விட முடியும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories