Astrology: 100 வருடங்களுக்குப் பிறகு சனி மீது நேரடியாக விழும் குரு பார்வை.! ராஜா பகவத் ஆக மாறப் போகும் 4 ராசிகள்.!

Published : Oct 21, 2025, 11:10 AM IST

Guru Shani Drishti lucky zodiac signs: குரு பகவானின் தெய்வீகப் பார்வை சனி பகவான் மீது விழுவதால், தீபாவளிக்குப் பிறகு மூன்று ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தைப் பெற உள்ளனர். அவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
16
சனி பகவான் மீது விழும் குருவின் பார்வை

வேத ஜோதிடத்தின் படி மனித வாழ்க்கையை அதிகம் பாதிக்கும் இரு கிரகங்களாக குரு மற்றும் சனி பகவான் விளங்குகின்றனர். இவர்களின் இயக்கம், நிலைகளில் மாற்றம் மற்றும் மனிதர்கள் மீது இவர்கள் செலுத்தும் செல்வாக்கு என்பது ஆழமானது மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் தன்மை உடையது. அக்டோபர் 18ஆம் தேதி குரு பகவான் தனது ராசியை மாற்றி தனது உச்ச ராசியான கடகத்தில் அமர்ந்துள்ளார். இந்த நிலையில் மீனத்தில் உள்ள சனியின் மீது அவர் தனது தெய்வீக பார்வையை செலுத்துகிறார்.

26
குரு சனி சேர்க்கை

மீனத்தில் உள்ள சனி பகவான் குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்து சஞ்சரித்து வருகிறார். இந்த நிலையில் குருவின் பார்வை நேரடியாக சனி மீது விழுகிறது. குரு மற்றும் சனியின் ஆற்றல்கள் இணைவது ஜோதிடத்தில் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த சேர்க்கை அறிவு மற்றும் ஞானத்தை வழங்குவதுடன், நல்லொழுக்கத்தை அதிகரிக்கும் என்றும், வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பிட்ட 4 ராசிக்காரர்கள் இந்த சேர்க்கை காரணமாக சிறப்பான பலன்களை அனுபவிக்க உள்ளனர். அவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

36
மகரம்
  • மகர ராசிக்காரர்கள் இந்த சேர்க்கை காரணமாக சிறப்பான பலன்களை பெறுவீர்கள். 
  • உங்கள் லக்னத்தின் அதிபதியான சனி பகவான், மூன்றாவது வீட்டிலும், குரு பகவான் ஏழாவது வீட்டிலும் அமர்கின்றனர். 
  • குருவின் பார்வை சனியின் மீது விழுகிறது. சனி பகவான் மூன்றாவது வீட்டில் இருப்பது நல்லதாக கருதப்படுகிறது. 
  • இந்த வீடு கடின உழைப்பு, தைரியம் மற்றும் முயற்சியைக் குறிக்கிறது. ஏழாவது வீட்டில் அமர்ந்துள்ள குரு மூன்றாவது வீட்டை பார்க்கும் பொழுது மங்களகரமான யோகம் உருவாகிறது. 
  • தனி நபர்கள் தங்கள் கடின உழைப்பின் முழு பலன்களையும் அனுபவிப்பீர்கள். குரு ஆறாவது வீட்டில் இருந்து நகர்ந்து, ஏழாவது வீட்டிற்குள் நுழையும் பொழுது பணியிடத்தில் இருந்து வரும் போராட்டங்கள் முடிவுக்கு வரும். 
  • சக ஊழியர்கள் மற்றும் மேல் அதிகாரிகளுடன் சுமுக உறவு கிடைக்கும். வேலை அழுத்தம் குறையலாம். 
  • உங்கள் கடின உழைப்புக்குரிய அங்கீகாரம், மரியாதை கிடைக்கும். 
  • குரு மற்றும் சனி பகவானின் செல்வாக்கு மூன்றாவது வீட்டின் பலம் அதிகரிக்கும். 
  • இதன் காரணமாக படைப்பாற்றல், சிந்தனை திறன் மற்றும் செயல் திறன் அதிகரிக்கும்.
46
கன்னி
  • கன்னி ராசியின் ஏழாவது வீட்டில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். குரு பகவான் பத்தாவது வீட்டில் இருந்து 11 வது வீட்டிற்குள் நுழைகிறார். 
  • குரு 11 வது வீட்டை அடையும் பொழுது அதன் தெய்வீகப் பார்வை சனியின் மீது விழுகிறது. இதன் காரணமாக கன்னி ராசிக்காரர்களும் சிறப்பான பலன்களை அனுபவிப்பீர்கள். 
  • நான்காவது மற்றும் ஏழாவது வீடுகளின் அதிபதியான குருபகவான் 11வது வீட்டில் இருப்பதால் வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும், சமூகத் தொடர்புகள் அதிகரிக்கும். 
  • 11வது வீடு வருமானம், நட்பு, உடன்பிறப்புகள் மற்றும் வாழ்க்கையின் அபிலாஷைகளை குறிக்கிறது. 
  • எனவே இந்த காலகட்டத்தில் உங்களது நிறைவேறாத ஆசைகள் பல நிறைவேறத் தொடங்கும். புதிய வாகனம், வீடு, மனை, சொத்து வாங்க திட்டமிட்டு இருந்தால் இந்த காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். 
  • நிதி பற்றாக்குறை காரணமாக தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். 
  • ஆறாவது வீட்டின் அதிபதியான சனி பகவான் அனைத்து தடைகளையும் நீக்கி, நிதி வாய்ப்புகளை வழங்குவார். 
  • இதன் காரணமாக உங்கள் பொன், பொருள், வசதிகள் அதிகரிக்கும்.
56
மிதுனம்
  • சனி பகவான் மீது விழும் குருவின் பார்வை மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகளை பெற்றுத் தரும். 
  • மிதுன ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். 
  • குடும்பத்துடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 
  • வெளிநாடு வர்த்தகம் மற்றும் சர்வதேச வாய்ப்புகள் கிடைக்கலாம். வெளிநாடு அல்லது தொலைதூர இடங்களுக்கு வேலைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். 
  • தேவையற்ற செலவுகள் குறையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், ஒத்துழைப்பும் அதிகரிக்கும். முடிக்கப்படாத பணிகள் முடிவடையும். 
  • அன்றாட வருமானம் உயரும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். 
  • கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவீர்கள். உங்களில் முயற்சிகளின் பலன் தெளிவாக தெரியத் தொடங்கும். 
  • சகோதர சகோதரிகளுடன் உறவு சுமூகமாக மாறும். 
  • வணிகம் அல்லது வேலை தொடர்பான பயணம் வெற்றியைத் தரும்.
66
கடகம்
  • கடக ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சனிப கவானின் இந்த சேர்க்கையானது பணியிடம் மற்றும் வியாபாரத்தில் அதிகப்படியான வெற்றிகளை குவிக்கும். 
  • முன்னர் செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரம் பெருகும். 
  • பணியிடத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. 
  • பொருளாதாரம் நிலைத் தன்மை அடையும் மற்றும் வளர்ச்சி கிடைக்கும். சமூகத்தில் நேர்மறையான மாற்றங்கள், ஒழுக்கம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு கிடைக்கும். 
  • இதுவரை இருந்து வந்த கால தாமதங்கள் நீங்கும். காரியங்கள் விரைவாகவும், வெற்றிகரமாகவும் முடிவடையும். 
  • நீங்கள் விரும்பிய பலன்களை கிடைக்கப் பெறுவீர்கள். 
  • அங்கீகாரம், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மாணவர்கள், ஆசிரியர்கள், படைப்புத் துறையில் இருப்பவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். 
  • புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories