Astrology: 100 ஆண்டுகளுக்குப் பின் தீபாவளி நாளில் நடக்கும் அதிசயம்.! குபேரன் அருளால் கட்டு கட்டாக பணத்தை அள்ளப்போகும் ராசிகள்.!

Published : Oct 01, 2025, 01:39 PM IST

mahalaxmi rajyog: 100 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி தினத்தில் சக்தி வாய்ந்த ராஜயோகம் உருவாக உள்ளது. செவ்வாய்-சந்திரன் சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் செல்வ செழிப்பை அடையுள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
14
மகாலெட்சுமி ராஜயோகம் 2025

ஜோதிடத்தின் படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 23 ஆம் தேதி துலாம் ராசியில் நுழைந்த செவ்வாய் பகவான் அக்டோபர் 27 ஆம் தேதி வரை அந்த ராசியிலேயே இருப்பார். அந்த சமயம் துலாம் ராசியில் சந்திர பகவானும் இணைவதால் அக்டோபர் 21 ஆம் தேதி மகாலட்சுமி ராஜயோகம் ஏற்பட இருக்கிறது. இந்த ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தர இருக்கிறது. அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

24
கடகம்:

மகாலட்சுமி ராஜயோகம் கடக ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை தரும். வேலை மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். உங்கள் இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான பல விளைவுகளைக் காண்பீர்கள். உங்களுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தால் நீங்கள் எடுக்கும் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். 

வேலையில்லாமல் தவித்து வருபவர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல வேலையைப் பெறுவீர்கள். கை நிறைய வருமானம் வரும் தொழில்களில் ஈடுபடுவீர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் வாய்ப்புகளும் உண்டு. வருமானம் அதிகரிப்பதால் புதிய வாகனம் புதிய சொத்துக்கள் வாங்கும் சூழல் ஏற்படும்.

34
மகரம்:

மகாலட்சுமி ராஜயோகம் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது. இந்த ராஜயோகம் உங்கள் ஜாதகத்தின் கர்ம ஸ்தானத்தில் உருவாகிறது. எனவே உங்கள் வேலை தொழில் ஆகியவற்றில் குறிப்பிட தகுந்த முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். திடீர் பணவரவால் உங்கள் நிதிநிலைமை கணிசமாக அதிகரிக்கும். நிலவையில் இருந்த வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். 

சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தொழில் செய்து வருபவர்கள் தொழிலை விரிவு படுத்துவீர்கள். தொழிற்கடனுக்காக விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு கடன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. இந்த காலகட்டத்தில் உங்கள் ஆரோக்கியமும் முழுமையாக மேம்படும்.

44
கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகம் உருவாவது நல்ல காலங்களைத் தரும். இந்த ராஜயோகம் உங்களின் செல்வம் மற்றும் பேச்சு ஸ்தானத்தில் உருவாகிறது. இதன் காரணமாக இந்த காலக்கட்டத்தில் எதிர்பாராத நன்மைகளைப் பெறுவீர்கள். நிதி நிலைமை மேம்படும். வேலையில் இருந்த தடைகள் நீங்கும். அலுவலகத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கி, புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். 

பங்குச்சந்தை அல்லது சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். சட்ட ரீதியாக போராடி வருபவர்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். வாய்ப்புகளை திறமையாக பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணை இனிமையாக அமையும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories