Kendra Drishti Yoga: அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி கொண்டாடப்படும் நிலையில் சக்தி வாய்ந்த கேந்திர திருஷ்டி யோகம் உருவாக இருக்கிறது. இதன் காரணமாக மூன்று ராசிகள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கிரகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கின்றன. அப்போது அவை பிற கிரகங்களுடன் இணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் குருபகவான் விஜயதசமி நாளில் புதன் பகவானுடன் இணைந்து கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்க இருக்கிறார்.
ஜோதிடத்தில் புதன் கிரகம் புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு, பேச்சு மற்றும் வணிகத்தின் அதிபதியாகவும் குருபகவான் அறிவு, அதிர்ஷ்டம், கல்வி, திருமணம், குழந்தைகள், செல்வம், தொழில், பணம் ஆகியவற்றின் காரகர்களாக விளங்குகின்றனர். இந்த இரண்டு சுப கிரகங்களின் இணைவு மங்களகரமானதாக கருதப்படுகிறது.
25
குரு-புதன் சேர்க்கை
தற்போது மிதுன ராசியில் குரு பகவான் பயணித்து வருகிறார். இவர் அக்டோபர் 2 ஆம் தேதி அதிகாலை 2.27 மணிக்கு கன்னி ராசியில் இருக்கும் புதன் பகவானை 90 டிகிரி தொலைவில் அமைந்து நேராக சந்திக்கிறார். இதன் காரணமாக கேந்திர திருஷ்டி யோகம் உருவாகிறது. இந்த யோகம் 12 ராசிகளுக்கும் நன்மைகளை வழங்கினாலும், மூன்று ராசிக்காரர்கள் நல்ல நன்மைகளை பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
35
ரிஷபம்
கேந்திர திருஷ்டி யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மைகளை வழங்குகிறது. நீண்டகாலப. பலன்களை ரிஷப ராசிக்காரர்கள் பெற உள்ளனர். இத்தனை நாட்களாக குடும்ப பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த அவர்கள் அனைத்து கவலைகளிலிருந்தும் விடுதலை பெறுவார்கள். வேலையில் இருப்பவர்கள் பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிப்பதை உணர்வார்கள்.
அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் முடித்து வெற்றிக் கொடியை நாட்டுவீர்கள். சொந்தமாக வணிகம் அல்லது தொழில் செய்து வருபவர்களுக்கு நிதி நெருக்கடியில் இருந்து நிரந்தரமாக நிவாரணம் கிடைக்கும்.
விஜயதசமி நாளில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை அனுபவிக்க உள்ளனர். விஜயதசமிக்கு பிந்தைய காலம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பாக அமைய உள்ளது. பழைய கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். திடீர் பண வரவு காரணமாக அனைத்து கடன்களையும் முடித்து நிம்மதியாக உணர்வீர்கள்.
தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் தொழிலை தொடங்குவீர்கள். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் உடல் நலக் கோளாறுகள் நீங்கி, ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.
55
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு விஜயதசமிக்கு பிறகு நல்ல காலம் தொடங்க இருக்கிறது. நிதி சிக்கல்களால் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைக்கும். வருகிற நாட்களில் நீங்கள் எந்த மனரீதியான அல்லது உடல் ரீதியான பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை. உடல் ஆரோக்கியம் மேம்படும்.
வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். முன்பை விட நீங்கள் சுறுசுறுப்பாக உணர்வீர்கள். உங்கள் ஆளுமைத் திறன் மேம்படும். கடின உழைப்பின் பலன்கள் அனைத்தையும் இந்த காலத்தில் பெறுவீர்கள். சொந்தமாக சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு யோகம் கைகூடும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)