Astrology: இன்று உருவாகும் தனயோகம்.! சரஸ்வதி அருளால் 5 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை கிடைக்கப் போகுது.!

Published : Oct 01, 2025, 10:55 AM IST

Dhana yoga: சரஸ்வதி பூஜை தினத்தில் மங்களகரமான தனயோகம் உண்டாக இருக்கிறது. இதனால் ஐந்து ராசிக்காரர்களுக்கு ராஜபோக வாழ்க்கை கிடைக்க இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
16
தனயோகம் 2025

நவராத்திரியின் நிறைவு நாளான இன்று (அக்.1) சரஸ்வதி பூஜையும், நாளை விஜயதசமியும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சிறப்பு தினத்தில் சந்திர பகவான் தனுசு ராசியில் இருந்து வெளியேறி மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக தனயோகம் உண்டாகிறது. இந்த யோகமானது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும் சந்திரனுக்கும் குருவுக்கும் இடையில் நவபஞ்சம் யோகமும், உத்திராட நட்சத்திரத்தின் சேர்க்கை காரணமாக ரவி யோகமும் உண்டாகிறது. 

கலைமகளுக்கு உகந்த இந்த நாளில் உருவாகும் சிறப்பு யோகங்களால் ஐந்து ராசிக்காரர்களுக்கு ராஜபோக வாழ்க்கை கிடைக்க உள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26
மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் அடுத்த சில தினங்களுக்கு சிறப்பான பலன்களை அனுபவிக்க உள்ளனர். உங்களின் சமூக மரியாதை, கௌரவம் ஆகியவை அதிகரிக்கும். எதிர்பாராத நிதி வரவுகள் ஏற்படும். வணிகம் செய்து வருபவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும். 

நிதி நிலைமையில் இருந்த ஏற்ற இறக்கங்கள் சரி செய்யப்பட்டு பொருளாதார நிலை மேம்படும். நீங்கள் செய்து வரும் முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிந்து பணம் கைக்கு வந்து சேரும்.

36
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியான வளர்ச்சியை இந்த யோகங்கள் கொண்டுவரும். ஏற்கனவே செய்து வரும் தொழிலை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வீர்கள். சிறிதாக தொழில் செய்து வருபவர்களுக்கு அதை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பல வழிகளில் சிக்கி இருந்த பணம் கைக்கு வந்து சேரும். 

புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகளும் உண்டு. தந்தை அல்லது தாய் வழி மூலம் பண உதவிகள் கிடைக்கும். சந்திரனின் ஆதிக்கம் காரணமாக நீங்கள் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை என இரண்டிலும் மகிழ்ச்சி நிலவும்.

46
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு அடுத்த சில நாட்கள் இனிமை நிறைந்ததாக இருக்கும். சவால்கள் நிறைந்த பணிகளையும் வெற்றிகரமாக முடித்து, சாதித்து காட்டுவீர்கள். உங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும். குடும்ப உறவுகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகப் பணி செய்து வருபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். படைப்பாற்றல் அதிகரிக்கும். 

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் நடக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.

56
துலாம்

சரஸ்வதி பூஜை தினத்தில் உருவாகும் யோகங்களால் துலாம் ராசிக்காரர்கள் நன்மைகளை பெறுவீர்கள். குறிப்பாக மாணவர்கள், பணிகளில் இருப்பவர்களுக்கு இந்த காலம் நன்மைகளைத் தரும். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கான காலம் நெருங்கி உள்ளது. நீண்ட கால கனவுகள் மற்றும் லட்சியங்களை நிறைவேற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் உங்கள் பக்கம் இருக்கும். 

தொழில் வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகள் விலகும். எந்த காரியத்தை எடுத்தாலும் ஏற்பட்டுக் கொண்டிருந்த தடைகள் இனி முழுவதுமாக விலகி நீங்கள் செய்யும் வேலையை சிறப்பாக செய்வீர்கள். இத்தனை நாட்களாக அனுபவித்து வந்த கஷ்டங்கள், பிரச்சனைகள் விலகி மனம் அமைதி பெறும்.

66
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு அடுத்த சில தினங்கள் மன வலிமை அதிகம் காணப்படும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். மன உறுதி மேம்படும். சவாலான காரியங்களையும் வெற்றிகரமாக முடித்து காட்டுவீர்கள். பிள்ளைகளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். வீட்டில் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். 

குழந்தை இல்லாமல் தவித்து வரும் தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. புதிய வீடு வாகனம் நிலம் போன்ற நல்ல திட்டங்களில் முதலீடு செய்வீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories