Astrology: அன்பை உடனே வெளிப்படுத்தும் 4 ராசிகள்.! காதல் வயப்பட்டால் உடனே சொல்லி விடுவார்களாம்.!

Published : Oct 01, 2025, 12:49 PM IST

ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்கள் காதல் உணர்வு வந்தால் அதை மறைக்காமல் உடனே வெளிப்படுத்திவிடுவார்கள். மேஷம், மிதுனம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகள் தங்கள் இயல்பான குணங்களால், அன்பை தைரியமாக தெரிவித்து, தங்கள் காதலில் வெற்றி காண்கிறார்கள்.

PREV
16
காதல் எனும் தேர்வெழுதி காத்திருக்கும்.!

ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்தன்மையான குணங்கள் இருக்கின்றன. சிலர் அன்பு வந்தாலும் அதை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு, சரியான நேரம் வரும் வரை காத்திருப்பார்கள்.  சிலர் கடைசி வரை சொல்லாமலேயே இதயம் முரளி  போல காதலித்துக்கொண்டே இருப்பர். ஆனால் சில ராசிக்காரர்கள் காதல் என்ற உணர்வு வந்துவிட்டால், அதை மறைக்காமல் நேராக வெளிப்படுத்திவிடுவார்கள்.இன்று அப்படி காதலை உடனே வெளிப்படுத்தும் 4 ராசிகளை பார்க்கலாம்.

26
மேஷம் (Aries)

தனது பேச்சாலும், நடத்தையாலும் அடுத்தவர்களை கவரும் தன்மையுடைய மேஷ ராசிக்காரர்கள் தீவிர உணர்வுகளுடன் வாழ்பவர்கள். அவர்கள் ஒருவரை விரும்பினால் உடனே அன்பை வெளிப்படுத்தாமல் இருக்கவே முடியாது. அவர்களின் மனசாட்சி எப்போதும் "நேர்மையே சிறந்தது" என்று சொல்வதால், காதல் உணர்வை மறைக்க முடியாது. சில நேரங்களில் இந்த திடீர் வெளிப்பாடு வெற்றி தராவிட்டாலும், அவர்களின் தைரியமும் உண்மையும் காரணமாக மற்றவர்கள் அவர்களை மதிப்பார்கள்.

36
மிதுனம் (Gemini)

மிதுன ராசிக்காரர்கள் சுவைபட பேசுபவர்கள். அவர்களுக்கு மனதில் தோன்றியது வாயிலில் வருவது மிகவும் இயல்பு. காதல் என்றால் அதை வார்த்தைகளால் வெளிப்படுத்துவது இவர்களுக்கு எளிதான விஷயம். "சொல்லாமலே இருந்தால் மற்றவர் புரிந்துக்கொள்வார்களா?" என்ற எண்ணம் இவர்களைத் தொடர்ந்து உந்துகிறது. அதனால் ஒருவரை விரும்பினால் மிகுந்த கவர்ச்சியுடன் பேசிக்கொண்டு, உடனே அன்பை தெரிவித்து விடுவார்கள்.

46
சிம்மம் (Leo)

சிம்ம ராசிக்காரர்கள் பெருமை, கம்பீரம் கொண்டவர்கள். ஆனால் காதல் வந்துவிட்டால் அவர்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது. தாங்கள் விரும்பும் நபரை கவர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையால், உடனே காதலை அறிவித்து விடுவார்கள். இவர்களின் கம்பீரமான குணம், தைரியமான வெளிப்பாடு, நேர்மையான அன்பு ஆகியவை மற்றவர்களை கவரும். "மறைத்து வைத்தால் அது அன்பல்ல" என்பதே இவர்களின் கொள்கை.

56
தனுசு (Sagittarius)

இயல்பாகவே அடுத்தவர்களை மதிக்கும் குணம் கொண்ட தனுசு ராசிக்காரர்கள் எப்போதும் சுதந்திரமாக சிந்திப்பவர்கள். அவர்கள் மனதில் தோன்றியதை வெளிப்படுத்தாமல் இருந்தால் அது அவர்களுக்கு சுமையாகிவிடும். எனவே காதல் வந்துவிட்டால் மறைக்காமல் நேராக சொல்லிவிடுவார்கள். "சொல்லிவிட்டால் என்ன ஆகும்? ஏற்கிறார்களா இல்லையா என்பது அவர்களின் தேர்வு" என்று எண்ணுவார்கள். இந்த எளிமையான மனப்பான்மையாலேயே இவர்களின் காதல் வெளிப்பாடு சுத்தமானதாக இருக்கும்.

66
உண்மையான அன்பு ஒருநாள் நிச்சயமாக கைகூடும்

காதலை வெளிப்படுத்தும் விதம் ஒவ்வொரு ராசிக்கும் வேறுபடும். ஆனால் மேஷம், மிதுனம், சிம்மம், தனுசு ராசிக்காரர்கள் அன்பை மறைக்காமல், உடனே தைரியமாக தெரிவித்து விடுவார்கள். அவர்களின் நேர்மை, தைரியம், உண்மை உணர்வுகள் காரணமாக அவர்கள் காதல் பல நேரங்களில் வெற்றியடையும். அன்பை வெளிப்படுத்தும் இந்த குணம் சில நேரங்களில் திடீரென தோல்வியையும் தரலாம். ஆனால் உண்மையான அன்பு ஒருநாள் நிச்சயமாக கைகூடும் என்பதில் இவர்களுக்கு நம்பிக்கை அதிகம்.

Read more Photos on
click me!

Recommended Stories