மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். சிரமங்கள் வந்தாலும் முடிவுகள் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத வளர்ச்சி காணப்படும். உங்கள் உழைப்புக்குரிய பலன்கள் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். பயணங்கள் மூலமாக லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
நிதி நிலைமை:
இன்று பணவரத்து அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களின் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவிகள் கிடைக்கலாம். வங்கி கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
தனிப்பட்ட வாழ்க்கை:
பெற்றோர்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் அன்பும் நல்லிணக்கமும் அதிகரிக்கும். காதல் உறவுகளில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். துணையின் உணர்வுகளை புறக்கணிப்பதை தவிர்க்கவும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
பரிகாரங்கள்:
இன்று லட்சுமி நாராயணரை வழிபடுவது விசேஷம். குலதெய்வத்தின் அருள் கிடைப்பதற்கு எந்த செயலையும் தொடங்குவதற்கு முன்னர் ஒரு நிமிடம் குலதெய்வத்தை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு செயலிலும் பொறுமையும், நிதானமும் தேவை. இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.