Birth Date : பிறந்த தேதிக்கு ஏற்ற லக்கி கலர்; இந்த கலர்ல டிரஸ் போட்டா லக் அடிக்கும்

Published : Jul 01, 2025, 01:50 PM ISTUpdated : Jul 01, 2025, 01:54 PM IST

எண் கணிதத்தின் படி, உங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் உங்களது பிறந்தநாளுக்கு எந்த நிறத்தில் ஆடை அணிய வேண்டும் என்று எங்கு காணலாம்.

PREV
15
எண் கணிதம்

எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதியை வைத்து அவரது குணாதிசயங்கள், எதிர்கால வாழ்க்கை என இதுபோன்ற பல விஷயங்களை சொல்லிவிடலாம். மேலும் பிறந்த தேதியை வைத்து அவர்களுக்கு பொருந்தக்கூடிய சில வண்ணங்களும் எண் கணிதத்தில் சொல்லப்பட்டுள்ளன. அந்த வண்ணங்கள் தான் அவர்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும், வெற்றி வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். இத்தகைய சூழ்நிலையில் ஒருவரது பிறந்த தேதியை வைத்து அவரது பிறந்தநாளுக்கு எந்த நிறத்தில் ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று இந்த பதிவில் காணலாம்.

25
1, 10, 19 மற்றும் 28 தேதிகள்

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்கள் தங்களது பிறந்த நாளில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் ஆடை தான் அணிய வேண்டும். ஏனெனில் இந்த நிறம் உங்களது வாழ்க்கையில் அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சியை பெறுக செய்யும் ஜோதிடத்தின்படி இந்த நான்கு தேதியில் பிறந்தவர்கள் செவ்வாய் கிரகத்தின் செல்வாக்கின் கீழ் வருவதால், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு மங்களகரமானதாக கருதப்படுகிறது.

2, 11, 20 மற்றும் 29 தேதிகள்

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் இந்த நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் தங்களது பிறந்த நாளன்று பச்சை அல்லது வெள்ளி நிறத்தில் தான் ஆடை அணிய வேண்டும். இந்த தேதியில் பிறந்தவர்கள் புதன் மற்றும் சுக்கிரன் கீழ் வருவதால், இந்த நிறங்கள் இவர்களுக்கு நல்ல பலனை தரும்.

35
3, 12, 21 மற்றும் 30 தேதிகள்

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் இந்த நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் தங்களது பிறந்தநாளன்று மஞ்சள் நிறத்தில் தான் ஆடை அணிய வேண்டும். குருவின் செல்வாக்கு இவர்கள் மீது இருப்பதால் இந்த நிற ஆடை உங்களுக்கு மங்களகரமானதாகும். இந்த நிறம் உங்களது நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக முடிக்கவும், வெற்றி பெறவும் உதவும்.

4, 13, 22 மற்றும் 31 தேதிகள்

எண் கணிதத்தின் படி, இந்த நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் தங்களது பிறந்த நாள் என்று சாம்பல் நிறத்தில் தான் ஆடை அணிய வேண்டும். இந்த நிறம் அவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்கும். பிறந்தநாள் தவிர பிற நாட்களிலும் இந்த நிறத்தில் ஆடை அணிவது அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

45
5, 14 மற்றும் 23 தேதிகள்

எண் கணிதத்தின் படி, இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் வெளிர் பச்சை மற்றும் நீல நிறம் கொண்ட ஆடைகளை தான் தங்களது பிறந்த நாளில் அணிய வேண்டும் இந்த நிறம் உங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் மாற்றும்.

6, 15 மற்றும் 24 தேதிகள்

எண் கணிதத்தின் படி, இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் பிறந்தநாள் என்று நீல நிறத்தில் தான் ஆடை அணிய வேண்டும். இந்த நிறம் உங்களுக்கு மங்களகரமானது என்பதால், உங்களது வாழ்க்கையில் வெற்றிக்கான வாய்ப்புகளை வழங்கும்.

55
7, 16 மற்றும் 25 தேதிகள்

எண் கணிதத்தின் படி, இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் பிறந்தநாள் என்று வெள்ளை நிறத்தில் தான் ஆடை அணிய வேண்டும். இந்த நிறம் அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும் என்று எண் கணிதம் சொல்லுகின்றது.

8, 17 மற்றும் 26 தேதிகள்

எண் கணிதத்தின் படி இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் தங்களது பிறந்தநாள் அன்று அடர் நீலம், ஊதா அல்லது கருப்பு நிறத்தில் தான் ஆடை அணிய வேண்டும். அது அவர்களுக்கு மங்களகரமானது.

9, 18 மற்றும் 27 தேதிகள்

எண் கணிதத்தின் படி, இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் தங்களது பிறந்தநாள் என்று சிவப்பு நிறத்தில் தான் ஆடை அணிய வேண்டும். இந்த நிறம் அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை வழங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories