எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதியை வைத்து அவரது குணாதிசயங்களை கணித்து விட முடியும். அந்த வகையில், ஒரு சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்பவே சுயநலவாதிகள் பிடிவாதம் ஆனவர்கள் மற்றும் திமிர் பிடித்தவர்கள் என்று சொல்லப்படுகிறது அவர்கள் தங்களது சொந்த நலனுக்காக பிறரிடம் நட்பாக பழகுவார்கள். எனவே எந்த தேதியில் பிறந்தவர்கள் மிகவும் சுயநலவாதிகள் என்று இந்த பதிவில் காணலாம்.
24
8, 17 மற்றும் 26 தேதிகள்
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்பவே சுயநலவாதிகளாக இருப்பார்கள். இவர்களை ஆளும் கிரகம் சனி. இவர்கள் பிறரின் கருத்துக்களை மதிக்காமல் மிகவும் கடினமான முடிவுகளை எடுப்பார்கள். இவர்கள் தர்க்கத்திற்கு அதிக முன்னுரிமை கொடுப்பார்கள். நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பார்கள். நீண்டகால நிலத்தன்மையை நாடுவார்கள். இது போன்ற காரணத்திற்காக இவர்கள் சில நேரங்களில் சுயநலமாக சிந்திப்பார்கள்.
34
7, 16 மற்றும் 25 தேதிகள்
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் சுயநலவாதிகள். இவர்கள் மீது கேதுவின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இவர்கள் உள்முக சிந்தனை கொண்டவர்கள் மற்றும் எதையும் மிக விரைவாக வெளிப்படுத்தவே மாட்டார்கள். இவர்கள் தங்களை நம்பும் பாதையை மட்டுமே பின்பற்றுவார்கள். மற்றவரின் உணர்வுகள் குறித்து சிறிது கூட கவலைப்பட மாட்டார்கள். ஏதாவது காரியம் செய்தால் அதனால் தங்களுக்கு பலம் கிடைக்குமா? இல்லையா? என்பதை ஆராய்ந்து செய்வார்கள். தாங்கள் செய்யும் காரியம் பிறரை காயப்படுத்தினால் கூட கவலைப்பட மாட்டார்கள்.
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்தின் இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்பவே சுயநலவாதிகளாக இருப்பார்கள். இவர்களுக்கு சூரியனின் தாக்கம் அதிகமாக இருக்கும். இவர்கள் தலைமைத்துவ குணங்களை கொண்டுள்ளதால் தங்கள் சொந்த கருத்துகளுக்கு மட்டுமே அதிக முன்னுரிமை கொடுப்பார்கள். தங்களது சொந்த நலன்களை கவனித்த பிறகு தான் பிறரை குறித்து சிந்திப்பார்கள்.