மகாசிவராத்திரி 2025 ஏன் கொண்டாடப்படுகிறது? இரவு முழுவதும் ஏன் தூங்க கூடாது?

Published : Feb 17, 2025, 08:42 AM IST

Mahashivratri 2025 Celebrations and Reasons : சிவபெருமானுக்கு உகந்த திருவிழாவான மகாசிவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
மகாசிவராத்திரி 2025 ஏன் கொண்டாடப்படுகிறது? இரவு முழுவதும் ஏன் தூங்க கூடாது?

மகாசிவராத்திரி 2025: மகாசிவராத்திரி சிவபெருமானின் மிகப்பெரிய திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்த விழா பிப்ரவரி 26, புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஒவ்வொருவரும் குல தெய்வ கோயிலுக்கும், சிவன் கோயிலுக்கும் சென்று பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். ஆனால், ஏன் அவ்வாறு செய்கிறோம், அதுக்கு என்ன காரணம் என்று பலரும் அறிந்திருப்பதில்லை. நம் முன்னோர்கள் காலத்திலிருந்து சிவபெருமானையும், குல தெய்வத்தையும் வழிபட்டு வருகிறோம். அப்படியிருக்கும் போது ஏன் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது, அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் நாம் முழுமையாக தெரிந்து கொள்வோம்.

25
மகாசிவராத்திரி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது என்பதற்கு 2 காரணங்கள்:

மகாசிவராத்திரி ஏன் கொண்டாடுகிறோம்: ஒவ்வொரு ஆண்டும் பால்குன மாத கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி திதியில் மகாசிவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்த விழா பிப்ரவரி 26, புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரி பண்டிகை சிவபெருமானுடன் தொடர்புடையது. இந்த நாளில் மக்கள் சிவபெருமானை மகிழ்விக்க விரதம் இருக்கிறார்கள். முக்கிய சிவன் கோயில்களில் இந்த நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மகாசிவராத்திரி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது என்பதற்கு பல நம்பிக்கைகள் உள்ளன. இந்த விழாவுடன் தொடர்புடைய 2 நம்பிக்கைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்…

35
இந்த நாளில் ஜோதிர்லிங்க வடிவில் சிவபெருமான் தோன்றினார்

சிவபுராணத்தின் படி, ஒருமுறை பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை நடந்து கொண்டிருந்தபோது, ​​அங்கு நெருப்பு வடிவில் ஒரு பெரிய சிவலிங்கம் தோன்றி, ‘இந்த சிவலிங்கத்தின் முனையைக் கண்டுபிடிப்பவர் தான் பெரியவர் என்று அசரீரி கேட்டது.

முனையைக் கண்டுபிடிக்க விஷ்ணு ஜோதிர்லிங்கத்தின் அடிப்பகுதிக்கும் பிரம்மா மேல் பகுதிக்கும் சென்றனர். பல ஆண்டுகள் முயன்றும் இருவராலும் ஜோதிர்லிங்கத்தின் முனையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் விஷ்ணுவிடம் பிரம்மா பொய் சொன்னார், ‘நான் இந்த ஜோதிர்லிங்கத்தின் முனையைக் கண்டுபிடித்துவிட்டேன்.’

45
இந்த நாளில் ஜோதிர்லிங்க வடிவில் சிவபெருமான் தோன்றினார்

அப்போது அங்கு மகா தேவர் தோன்றி, ‘இந்த ஜோதிர்லிங்கம் என்னுடைய வடிவம் என்றார். பிரம்மா பொய் சொன்னதால் சிவபெருமான் அவரை வழிபடக்கூடாது என்று சாபமிட்டார். மேலும் உண்மைக்காக விஷ்ணுவைப் பாராட்டினார்.

சிவபெருமான் கூறினார், ‘பால்குன மாத கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி திதியில் என்னை வழிபடுபவருக்கு அகால மரண பயம் இருக்காது.’ அன்றிலிருந்து மகாசிவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

55
சிவபெருமான் மற்றும் பார்வதியின் திருமண விழா

பல இடங்களில் மகாசிவராத்திரி பண்டிகை சிவபெருமான் மற்றும் பார்வதியின் திருமண விழாவாக கொண்டாடப்படுகிறது. பால்குன மாத கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி திதியில் தான் சிவ-பார்வதி திருமணம் நடந்தது என்பது நம்பிக்கை. இந்த நாளில் இரவு முழுவதும் தூங்காமல் இருந்து சிவபெருமானை வழிபட கணவன் மனைவிக்கிடையில் உறவு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி குடி கொள்ளும், ஆரோக்கியம் மேம்படும், பொருளாதாரத்தில் முன்னேற்றம், செல்வ செழிப்பான வாழ்க்கை என்று எல்லாமே கிடைக்க பெறும் என்பது ஐதீகம். உஜ்ஜைனில் உள்ள மகா காளேஸ்வரர் கோயிலில் மகாசிவராத்திரி அன்று சிவ நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த 9 நாட்களில் சிவபெருமானுக்கு மணமகன் போல் அலங்காரம் செய்யப்பட்டு, மஞ்சள் மற்றும் மருதாணி இடப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories