ஜோதிட சாஸ்திரத்தில் 'லாப திருஷ்டி ராஜயோகம்' என்பது ஒரு ஜாதகருக்கு எதிர்பாராத பணவரவு, தொழிலில் அபார லாபம் மற்றும் சொத்து சேர்க்கை ஆகியவற்றை வாரி வழங்கும் ஒரு சிறப்பான அமைப்பாகும். பொதுவாக, ஜாதகத்தில் 11-ம் இடம் 'லாப ஸ்தானம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தையும், அங்கிருக்கும் கிரகங்களையும் சுப கிரகங்கள் பார்க்கும் போது இந்த யோகம் ஜொலிக்கும். இந்நிலையில் மே 2 முதல் தொடங்கும் லாப திருஷ்டி ராஜயோகத்தால், சனி மற்றும் சுக்கிரன் கிரகங்களின் குறிப்பிட்ட சேர்க்கை உருவாகிறது. இந்த யோகம், நீண்ட நாள் கடின உழைப்புக்கும், தொழிலில் இருந்த நிலைத்தன்மைக்கும் நல்ல பலன்களைக் கொண்டு வரும்.