64 ஆண்டுகளுக்கு பிறகு வரும் குபேர யோகம் – இந்த 2 ராசிக்காரங்க தான் எஜமான் – ஜாக்பாட் அடிக்க போகுது!

First Published | Nov 6, 2024, 1:02 PM IST

Kubera Yoga Palan in Tamil: ஜோதிட சாஸ்திரத்தில் குபேர யோகம் 64 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகிறது. கார்த்திகை மாதத்தில் இந்த 2 ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். அவர்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க..

Kubera Yoga Palan, Astrology, Zodiac Signs

Kubera Yoga Palan in Tamil: பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் 144 வகையான யோகங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் குபேர யோகம். இந்த யோகம் இருந்தாலே அந்த ராசிக்காரர் செல்வ செல்வழிப்போடு இருப்பார். அப்படிப்பட்ட குபேர யோகம் 64 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகிறது. இது கார்த்திகை மாதத்தில் 2 ராசியினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்க போகிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம். நவம்பர் 16 ஆம் தேதி கார்த்திகை பிறக்கிறது. இந்த மாதத்தில் குபேர யோகத்தால் மேஷம் மற்றும் மீனம் ராசியைச் சேர்ந்த அன்பர்கள் செல்வ செழிப்போடு வாழ போகிறார்கள். அவர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம் வாங்க…

Kubera Yoga Palan, Horoscope

மேஷம்:

மேஷ ராசியினருக்கு ஏதேனும் கோர்ட் வழக்கு இருந்தால் அவற்றில் சாதகமான தீர்ப்பு வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார பிரச்சனை சீராகும். கஷ்டம் யாவும் நீங்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். குடும்ப பிரச்சனைகள் தீரும்.

Tap to resize

Kubera Yoga Palan, Pisces, Astrology

மீனம்:

மீன ராசிக்கு இருந்த பொருளாதார பிரச்சனை சரியாகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். யாரிடமும் இனிமையாக பேசி காரியம் சாதித்து கொள்வீர்கள். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். சுப நிகழ்ச்சி நடைபெற வாய்ப்புகள் இருக்கிறது. வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

Latest Videos

click me!