நவம்பர் 7 - டிசம்பர் 28 வரை – குரு சுக்கிரன் பரிவர்த்தன ராஜயோகம் – அரசு வேலை, ராஜவாழ்க்கை யாருக்கு அமையும்?

Published : Nov 06, 2024, 11:10 AM IST

Parivartana Rajayoga 2024 Palan in Tamil: குரு தனுசு ராசியிலும் சுக்கிரன் ரிஷப ராசியிலும் சஞ்சரிப்பதால் பரிவர்த்தன ராஜயோகம் உருவாகிறது. நவம்பர் 7 முதல் டிசம்பர் 28 வரை இந்த ராஜயோகம் நீடிக்கும். இதனால் எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்று பார்க்கலாம்.

PREV
15
நவம்பர் 7 - டிசம்பர் 28 வரை – குரு சுக்கிரன் பரிவர்த்தன ராஜயோகம் – அரசு வேலை, ராஜவாழ்க்கை யாருக்கு அமையும்?
Parivartana Rajayoga 2024 Palan in Tamil, Jupiter Venus Transit

Parivartana Rajayoga 2024 Palan in Tamil: குரு மற்றும் சுக்கிரனின் இட பெயர்ச்சி ராஜயோகத்தை உருவாக்க இருக்கிறது. சுக்கிர பகவான் குருவின் ராசியான தனுசு ராசியில் நவம்பர் 7ஆம் தேதி நாளை பெயர்ச்சியாகிறார். குரு பகவான் சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் டிராவல் செய்கிறார். இந்த இரு கிரகங்களின் நிலை தான் பரிவர்த்தன ராஜயோகத்தை உருவாக்கிறது.

25
Zodiac Sign, Jupiter Venus Transit, Parivartana Rajayoga 2024 Palan in Tamil

தனுசு ராசிக்கு செல்லும் சுக்கிரன் வரும் டிசம்பர் 28ஆம் தேதி அந்த ராசியில் இருப்பதால் ராஜயோகம் டிசம்பர் 28ஆம் தேதி வரையில் நீடிக்கும். இது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை அளிக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க. பரிவர்த்தன ராஜயோகமானது எல்லா ராசியினரிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், ஒரு சில ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும். அது எந்தெந்த ராசி என்று பார்க்கலாம் வாங்க.

35
Parivartana Rajayoga 2024 Palan in Tamil, Jupiter Venus Transit

சிம்மம்:

இந்த ராசிக்கு 5ஆவது வீட்டில் சுக்கிர பகவானும், 10ஆவது வீட்டில் குரு பகவானும் இருப்பதால் நாளை முதல் அற்புதமான காலகட்டமாக இருக்கும். அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.

45
Jupiter Venus Transit, Parivartana Rajayoga 2024 Palan in Tamil

கன்னி:

பரிவர்த்தன ராஜயோகம் கன்னி ராசியினருக்கு எல்லா துறைகளிலும் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிதாக வீடு, நிலம், வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் நடைபெறும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு உருவாகும்.

55
Parivartana Rajayoga 2024 Palan in Tamil, Astrology

விருச்சிகம்:

இந்த ராசிக்கு 2ஆவது வீட்டில் சுக்கிரன் மற்றும் ஆவது வீட்டில் குரு பகவான் இருப்பதால் பணப்பிரச்சனை தீரும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். வராத பணம் கைக்கு வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories