
வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றி வீடுகள் கட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், எல்லை விழயத்தையும் வாஸ்து சாஸ்திரம் ஒழுங்குபடுத்தும் என்கின்றனர் அத்துறை வல்லுணர்கள். நமது இல்லத்தில் செல்வம், நலன், அமைதி மற்றும் உறவுகளில் ஒற்றுமை நிலவ வேண்டுமெனில், வாஸ்து சாஸ்திரத்தின் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். வாஸ்துவின் அடிப்படையில், வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியான சக்தி உண்டு. அதில், சமையலறை (கிச்சன்) என்பது வெறும் சமைக்கும் இடமாக அல்ல; அன்னபூரணி தேவி மற்றும் மகாலட்சுமியின் வாசஸ்தலமாகவும் கருதப்படுகிறது. எனவே வாஸ்து சாஸ்திரத்தின்படி சமையல் அறையில் சில விஷங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியது கட்டாயமாகிறது.
குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இடம் சமையல் கூடமே ஆகும். அம்மா கையால் சமைக்கும் உணவு சுவையையும், அன்பையும் மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் அப்படியே அள்ளி தருகிறது. சிறு துவையலோ, இல்லை தலைவாழை இலை போட்டு விருந்து சாப்பாடோ அம்மை கையால் கிடைத்தால் அது பெரும் பாக்கியம்தான். வாழும் தெய்வமான நமது அம்மாவோ, அக்கா தங்கைகளோ அல்லது இல்லத்தரசிகளோ பெரும்பாலான நேரம் இருக்கும் சமையல் அறையை வாஸ்துபடி அமைத்து, அங்குள்ள சாமான்சட்டுகளையும் வாஸ்துபடியே அடுக்கி வைத்தால் இல்லமும் உள்ளமும் மேலும் சிறக்கும். சந்தோஷமும், மகிழ்ச்சியும் உச்சம் தொடும்.
வாஸ்து சாஸ்திரம் படி சமையலறை என்பது ‘அக்னி மூலதளம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கே ஏற்படும் அதிசக்தி உணவுடன் குடும்பத்தினர் உடலிலும், வாழ்க்கை நிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் சமையலறையில் தூய்மை, ஒழுங்கு மற்றும் பாத்திரங்களை வைக்கும் முறை எல்லாம் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டவை எனவும் ஜோதிட நூல்கள் எடுத்துறைக்கின்றன. அடுப்பு, பாத்திரங்கள் மற்றும் மிக்சி கிரைண்டர் போன் இயந்திரங்கள் ஆகியவற்றை சரியான இடத்தில் வைக்கும் போது சமையல் அறை அழகாக இருப்பதுடன், அங்கு செல்வோருக்கும் நம்பிக்கையும் சந்தோஷத்தை அது கொடுக்கும் என்பதே வாஸ்து நிபுணர்களின் கருத்து. வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கையுள்ளோர் சமையல் அறையை வாஸ்து முறைபடி அமைக்கும் போது வீட்டின் அழகும் வீட்டில் உள்ளோரின் ஆனந்தமும் பலமடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
சமையல் அறை வாஸ்து சாஸ்திரம் பாத்திரத்தை அடுக்கி வைப்பதில் கூட இருப்பதாக கருத்து நிலவுகிறது. அதேபோல் பாத்திரங்களை கையாளும் விவத்திலும் சில முறைகள் இருப்பதாக முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். எது எப்படியோ எந்த ஒரு விஷயத்திலும் நல்லது இருக்குமேயானால் அதனை பின்பற்றுவது நல்லதுதானே. பாத்திரங்களை கழுவிய பின் அதனை தலைகீழாக வைத்து உலர்த்துவது நம்மில் பலரின் வழக்கமாகும். ஆனால் வாஸ்து நம்பிக்கைகள் படி, தவா, தோசைக்கல் மற்றும் எண்ணெய் சட்டிகள் போன்ற பாத்திரங்களை தலைகீழாக வைக்க கூடாது என்கிறது வாஸ்து சாஸ்திரம். இந்த இரண்டு பாத்திரங்கள் சமையலில் முக்கியமானவை. அவற்றை தலைகீழாக வைக்கும் போது எதிர்மறையான சக்திகள் சமையலறையில் பரவி, அதன் தாக்கம் நேரடியாக குடும்பத்தில் நலன்களுக்கும், பண நிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்துமாம்.
விளைவுகள்
* குடும்ப உறுப்பினர்களுக்கிடையே மனஅமைதி குறையும்
* பண வருவாய் குறையும் அல்லது தவறு நடந்துபோகும்
* மகாலட்சுமியின் அருள் மங்கும்
சமைத்து முடித்ததும், தவா மற்றும் தோசைக்கல்லை நன்றாக கழுவி, நேராக செங்குத்தாக வைத்திருக்க வேண்டும். அவற்றை தலைகீழாக வைப்பது தவிர்க்கப்பட வேண்டும். பக்கவாட்டாக வைக்கலாம். இதன்மூலம் அந்த பாத்திரங்கள் விரைவில் உலர வாய்ப்பு இருக்கிறது.
நேராக வைத்தால் இதெல்லாம் நடக்கும்
* குடும்பத்தினரின் சந்தோஷம் பலமடங்கு அதிகரிக்கும்
* பணப்புழக்கம் அதிகரித்து, வருமானம் பெருகும்
* வீட்டில் மகாலெட்சுமி வாசம் செய்வாள்
* இல்லம் ஆனந்தம் விளையாடும் வீடாக மாறும்
* வடமேற்கில் சமையலறை வைப்பதை தவிர்க்கவும் – சமையலறைக்கு கிழக்கே அல்லது தெற்கே இடம் இருக்க வேண்டும்.
* சமையலறையில் குப்பையை கிழக்குப் பக்கம் வைக்கவேண்டாம் – இது மகாலட்சுமியின் நுழைவில் தடையாக அமையும்.
* பழைய மற்றும் உடைந்த பாத்திரங்களை வைக்காதீர்கள் – இது தவிர்க்க வேண்டிய வாஸ்து குற்றங்களில் ஒன்று.
* இரவு நேரத்தில் கழுவாத பாத்திரங்களை வைக்காதீர்கள் – இதும் மகாலட்சுமியை கோபப்படுத்தும் ஒரு நம்பிக்கை.
* அமைதி மற்றும் நலனுக்காக சமையலறையில் எப்போதும் ஒழுங்கு மற்றும் தூய்மை நிலவ வேண்டும்.
வீட்டில் வாழும் அனைவரின் ஆரோக்கியமும், பணச் செழிப்பும் சமையலறையின் ஆற்றலைப் பொருத்தே அமைகின்றன. சமையலறையின் வாஸ்து சீராக இல்லாதபோது மனதில் குழப்பம், கவலை, சோர்வு போன்ற மனநிலைகள் கூட ஏற்படக்கூடும். இது உடன் பணத்திலான சிக்கல்கள், செலவுகள் அதிகரிப்பு போன்ற தாக்கங்களை தரக்கூடும்.
பொதுவாக நாம் வைக்கும் பழக்க வழக்கங்கள், வாஸ்து நோக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. தவா மற்றும் தோசைக்கல்லை தலைகீழாக வைப்பது ஒரு சின்ன தவறு போல தோன்றினாலும், அதன் பின் விளைவுகள் ஆழமானவை. வீட்டில் பணநிலை மோசமாக வேண்டாம், செல்வம் குறைய வேண்டாம் என்றால், இத்தகைய வாஸ்து குறிப்புகளை நடைமுறைப்படுத்துவது நல்லது. இது விஞ்ஞான அடிப்படையில் நிரூபிக்கப்பட்டது அல்ல என்றாலும், நம்பிக்கை, அனுபவம் மற்றும் பாரம்பரிய மரபுகளால் இது தொடரப்பட்டு வருகிறது.