ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களும் தங்கள் நிலையை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கின்றன. கிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் என்பது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் கேது பகவான் 2026 ஆம் ஆண்டு தனது ராசியை மாற்றப் போகிறார். 18 மாதங்களுக்கு ஒரு முறை ராசியை மாற்றும் அவர் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழைய இருக்கிறார்.
ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது ஆகிய இரு கிரகங்களும் நிழல் கிரகமாக அறியப்படுகின்றன. இந்த இரண்டு கிரகங்களும் எப்போதும் வக்கிர (பின்னோக்கிய) இயக்கத்திலேயே நகரும். கேது பகவான் ‘மோட்ச காரகன்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் ஆன்மீக உறவுகள், துறவு, ஆராய்ச்சி மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளுடன் தொடர்புடையவர்.
கேது பகவான் ஒரு ராசியில் 3,6,11 ஆம் வீடுகளில் சஞ்சரிக்கும் பொழுது சிறப்பான நன்மைகளை வழங்குவார் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. 2026-ல் நடக்க உள்ள கேது பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.