Weekly Rasi Palan: கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் குருவின் பலத்தால் நினைத்தது அனைத்தும் நடக்கப்போகுது.!

Published : Dec 07, 2025, 04:49 PM IST

Kanni Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 08 முதல் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
வார ராசிப்பலன்கள் - கன்னி

கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் குருவின் பலத்தால் திருமண வாழ்க்கை மற்றும் தொழிலில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். உங்களின் புத்திசாலித்தனம் மற்றும் முடிவெடுக்கும் திறன் கூர்மையாக இருக்கும். 

குடும்பம் சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்கும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும். தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. இந்த வாரம் தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரலாம்.

நிதி நிலைமை:

இந்த வாரம் உழைப்பிற்கு ஏற்ற வருவாய் கிடைக்கும். தொழில் அல்லது கூட்டாண்மை மூலம் நிதி நிலைமை மேம்பட வாய்ப்பு உள்ளது. வீடு அல்லது வாகனத்திற்காக செலவுகள் ஏற்படக்கூடும். 

எதிர்பாராத செலவுகளுக்காக பணம் செலவழிக்க நேரிடலாம். நிதி விஷயங்களில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியம். குடும்ப சொத்து அல்லது முதலீடுகள் குறித்து நிதானத்துடன் முடிவெடுக்கவும்.

ஆரோக்கியம்:

தாயின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. முதுகு, வயிறு, செரிமானம் சார்ந்த விஷயங்களில் பிரச்சனைகள் வரலாம். சனி பகவானின் நிலை காரணமாக நாள்பட்ட நோய்களில் சிறு பின்னடைவுகள் ஏற்படலாம்.

சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி நன்மை தரும். மனதளவில் சிறு சஞ்சலங்கள் இருந்தாலும் விரைவில் தெளிவடைவீர்கள். யோகா மற்றும் தியானம் அமைதியைத் தரும்.

கல்வி:

புதன் நான்காம் வீட்டில் இருப்பதால் மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். உழைப்பை நம்பி இருப்பவர்களுக்கு பலன் கிடைக்கும். செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆதரவால் மாணவர்கள் படிப்பில் சிறப்பார்கள். படிப்பிற்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும்.

தொழில் மற்றும் வியாபாரம்:

பணியிடத்தில் உங்களின் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். சனி பகவானின் நிலையால் வேலை சுமை கூடினாலும் அதை சிறப்பாக சமாளிப்பீர்கள். வார இறுதியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். 

கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். பணியிடத்தில் மாறுதல்கள் அல்லது புதிய பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

குடும்ப உறவுகள்:

குரு பகவானின் வலுவான நிலை காரணமாக திருமண வாழ்க்கை இனிமையாகவும், இணக்கமாகவும் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். தாயுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பேச்சில் நிதானம் தேவை. 

குடும்ப சொத்து அல்லது வேறு சார்ந்த விஷயங்கள் குறித்து விவாதம் எழலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் கல்வி மற்றும் திறமைகளில் முன்னேற்றம் காணப்படும்.

பரிகாரம்:

மகாவிஷ்ணுவை வழிபடுவது நல்லது. புதன்கிழமை தோறும் பச்சை பயறு தானம் செய்வது நல்லது. குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை வழிபடுவது எதிர்மறை ஆற்றலை விலக்கும். உழைப்பவர்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது நன்மை தரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories