கடக ராசி நேயர்களே, இந்த வாரம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். அதே சமயத்தில், சாதிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். சூரியன் மற்றும் புதன் பகவானின் நிலை உங்களுக்கு எதிர்ப்புகளை சமாளிக்கும் ஆற்றலைக் கொடுக்கும்.
மனதில் குழப்பங்களும், தெளிவின்மையும் வந்து நீங்கும். சனி அஷ்டமத்தில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் ஸ்தானத்தில் குரு செவ்வாய் இருப்பதால் வேலை மற்றும் தொழிலில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும்.
நிதி நிலைமை:
இன்றைய தினம் பொருளாதாரம் சீராக இருக்கும். திடீர் பண வரவுகளுக்கான வாய்ப்பு உண்டு. செலவுகளை திட்டமிட்டு செய்ய வேண்டியது அவசியம். வீண் செலவுகளை தவிர்க்கவும்.
முதலீடுகள் குறித்து முடிவெடுப்பதற்கு முன்னர் நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்பது நல்லது. பங்குச்சந்தை முதலீடுகளில் கவனம் தேவை. பழைய கடன்களை தீர்ப்பதற்கான வழிகள் திறக்கப்படும்.
ஆரோக்கியம்:
சனிபகவானின் நிலை காரணமாக ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவைப்படலாம். அதிக உழைப்பு அல்லது அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். கண் எரிச்சல், வயிறு உபாதைகள் ஆகியவை வந்து நீங்கும். வாகனம் ஓட்டும் பொழுது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
கல்வி:
இந்த வாரம் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் கடுமையான உழைப்பை கொடுத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த வாரம் நல்ல செய்திகள் கிடைக்கலாம்.
தொழில் மற்றும் வியாபாரம்:
பணியிடத்தில் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் விற்று கொடுத்து செல்வது நல்லது. உயர் அதிகாரிகளின் ஆதரவு காரணமாக இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.
குடும்ப உறவுகள்:
குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். கணவன் மனைவிக்கு இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கலாம்.
தாய் வழி உறவுகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள், சச்சரவுகள் தீரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன் கூடி வரும்.
பரிகாரம்:
திங்கட்கிழமை தோறும் சிவபெருமானை வழிபடுவது நல்லது. சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து ஓம் நமச்சிவாய மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும். சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க ஆஞ்சநேயரை வழிபடலாம். ஆதரவற்றோர் இல்லங்கள் அல்லது முதியோர் இல்லங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது கூடுதல் நன்மைகளைத் தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)