ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் உறவுகள் மற்றும் தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டிய வாரமாக இருக்கும். வாரத்தின் தொடக்கத்தில் திடீர் தடைகள், மனக்குழப்பங்கள் ஏற்படலாம். வார இறுதியில் அதிர்ஷ்டம் கூடும்.
வாழ்க்கைத் துணை வழி ஆதாயமும், குடும்பத்தினர் மூலம் மகிழ்ச்சியும் உண்டாகும். அதிக வேலைப்பளு காரணமாக சோர்வுகள் ஏற்படலாம். இருப்பினும் பொறுப்புகளில் இருந்து விலகாமல் செயல்படுவது வெற்றிக்கு உதவும்.
நிதி நிலைமை:
விரய ஸ்தானத்தில் கிரகங்கள் இருப்பதால் கட்டுப்பாடற்ற செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பணத்தை முதலீடு செய்வதற்கு முன்னர் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
வாழ்க்கைத் துணை அல்லது வியாபாரக் கூட்டாளிகள் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கலாம். கடன் கொடுப்பது அல்லது வாங்குவதை தவிர்க்கவும். நிதி சார்ந்த ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்னர் கவனம் தேவை.
ஆரோக்கியம்:
செவ்வாய் 12ஆம் வீட்டில் இருப்பதால் அதிக வேலை மற்றும் அலைச்சல் காரணமாக உடல் சோர்வு, தூக்கமின்மை ஏற்படலாம். வாரத்தின் தொடக்கத்தில் மன அழுத்தம் அதிகமாக இருக்கும். எனவே தியானம் செய்வது நல்லது.
வாகனம் ஓட்டும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வயிறு அல்லது சிறுநீர் தொடர்பான உபாதைகள் வரலாம். எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
கல்வி:
உயர்கல்வி அல்லது ஆராய்ச்சி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாரமாகும். கல்வியில் தடைகள் வந்தாலும் விடாமுயற்சியுடன் உழைப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
உயர்கல்விக்கான வாய்ப்பு தேடுபவர்களுக்கு சிறு தாமதத்திற்கு பின்னர் நல்ல செய்திகள் வரலாம். வெளிநாடு செல்ல நினைக்கும் மாணவர்களின் கனவு நிறைவேறும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
தொழில் ஸ்தானத்தில் சுப கிரகங்கள் இருப்பதால் உத்தியோகத்தில் நிலையான வளர்ச்சி காணப்படும். கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். பொறுப்புக்கள் அதிகரிக்கும். சோர்வடையாமல் கடமையை செய்பவர்களுக்கு வளர்ச்சி கிடைக்கும்.
வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சமூகமான உறவு நீடிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு உத்தியோகம் காரணமாக பயணம் செல்ல நேரிடலாம்.
குடும்ப உறவுகள்:
சூரியன் மற்றும் சுக்கிர பகவானின் நிலை காரணமாக திருமண உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் மூலம் ஆதரவு கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.
வார்த்தைகளில் கவனம் தேவை. உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் ஆதாயங்கள் உண்டு. குழந்தைகளின் முன்னேற்றத்திற்குத் தேவையான வேலைகளை செய்யத் தொடங்குவீர்கள்.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வணங்கி வரவும். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபடவும். செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு “ஓம் நமோ நாராயண:” மந்திரத்தை 11 முறை உச்சரிக்கவும்.
ஆஞ்சநேயர் வழிபாடு மனதிற்கு அமைதியைத் தரும். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நற்பலன்களை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)