ஜோதிட கணிப்புகளின்படி, சந்திரன் ராசியை மாற்றிக் கொண்டு பயணிக்கிறது. இந்த மாற்றத்தின் போது மற்ற கிரகங்களுடன் ஏற்படும் சேர்க்கைகள், அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. சிலருக்கு இது முன்னேற்றத்தையும் நன்மைகளையும் தரக்கூடும்; மற்ற சிலருக்கு சவால்களையும் உருவாக்கலாம். மே 22ஆம் தேதி சந்திரன் சிம்ம ராசியில் பிரவேசிக்கிறது. அங்கு ஏற்கனவே கேது இருப்பதால், சந்திரன்-கேது சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகிறது. இந்த யோகம் குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு நிதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும் என கூறப்படுகிறது.