Astrology: பொங்கல் முடிந்த கையோடு குரு பகவான் உருவாக்கும் சிறப்பு ராஜயோகம்.! இந்த ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்.!

Published : Jan 15, 2026, 01:45 PM IST

Gajakesari Rajyog: ஜனவரி 17 ஆம் தேதி இரவு 11:45 மணிக்கு கிரக நிலைகளில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ உள்ளது. சந்திரன் மிதுன ராசிக்குள் நுழையும் போது கஜகேசரி யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் பலன்பெறும் ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

PREV
15
கஜகேசரி ராஜயோகம் 2026

ஜோதிடத்தின்படி, சந்திரன் மற்றும் குரு ஒரே ராசியில் அல்லது கேந்திர ஸ்தானத்தில், அதாவது 1, 4, 7, 10 ஆம் வீட்டில் இணைந்தால் ‘கஜகேசரி ராஜயோகம்’ உருவாகும். சந்திரன் மனநிலை, உணர்ச்சிகளைக் குறிக்கும் கிரகமாவார். குரு பகவான் அறிவு, ஞானம், செல்வம், நீதி மற்றும் மங்கள நிகழ்வுகளின் காரணியாகக் கருதப்படுகிறார். எனவே, இந்த இரு கிரகங்களின் சேர்க்கை ஜோதிடத்தில் அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. கஜகேசரி யோகத்தால் பலனடையும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
மிதுனம்

மிதுன ராசியிலேயே ‘கஜகேசரி ராஜயோகம்’ உருவாவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சிகள் கைகூடும். தடைபட்டு நின்று போன காரியங்கள் மீண்டும் வேகம் எடுக்கும். பணியிடத்தில் இருந்து வந்த மன அழுத்தங்கள் நீங்கும். உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த உயர் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

35
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகத்தால் அதிக நன்மை உண்டாகும். இந்த ராஜயோகம் ரிஷப ராசியின் இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் உருவாகிறது. இதனால் வறுமை நீங்கி வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பாரத முன்னேற்றம் காணப்படும். பழைய முதலீடுகளிலிருந்து எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதி நிலவும். திருமண யோகம் கைகூடும். மனதில் புதிய தெளிவும், உற்சாகமும் பிறக்கும்.

45
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கும் இந்த நேரம் மிகவும் முக்கியமானது. சிம்ம ராசியின் 11-வது வீடான லாப ஸ்தானத்தில் ‘கஜகேசரி ராஜயோகம்’ உருவாகிறது. ஆளுமையில் ஒரு புதிய பிரகாசம் இருக்கும். தன்னம்பிக்கை இரட்டிப்பாகும். பணியிடத்தில் முன்னேற்றம், அங்கீகாரம் மற்றும் பாராட்டு கிடைக்கும். குறிப்பாக ஊடகம், எழுத்து மற்றும் கல்வித் துறையில் உள்ளவர்களுக்கு இந்த நேரம் ஒரு பொன்னான யோகமாக அமையும். பொருளாதாரத்திலும் முன்னேற்றம் காணப்படும்.

55
தனுசு

தனுசு ராசியின் சப்தம ஸ்தானமான ஏழாம் வீட்டில் ‘கஜகேசரி ராஜயோகம்’ உருவாகிறது. ஏழாம் வீடு திருமண உறவுகள் மற்றும் தொழில் கூட்டாண்மைகளை குறிக்கும் வீடாகும். எனவே வரன் தேடுபவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நீண்ட நாட்கள் இழுபறியில் இருந்த திருமண பேச்சு வார்த்தைகள் சமூகமாக முடியும். கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இலாபத்தை பெருக்கும் வகையில் ஆர்டர்கள் முடியும். தேங்கி இருந்த சரக்குகள் விற்றுத் தீரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories