குரு தரும் கஜகேசரி யோகம் – 3 நாளும் ரொம்பவே ஜாலி தான் போங்க, தூள் கிளப்ப போறீங்க; யாரெல்லாம் தெரியுமா?

Published : Nov 13, 2024, 10:18 PM ISTUpdated : Nov 14, 2024, 01:38 AM IST

Gajakesari Yoga Palan Tamil : ரிஷப ராசியில் குரு மற்றும் சந்திரன் சேர்க்கையால் கஜகேசரி யோகம் உருவாகிறது. இது 6 ராசிகளுக்கு நன்மைகளை கொடுக்க போகிறது. எந்தெந்த ராசிகளுக்கு கஜகேசரி யோக பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

PREV
17
குரு தரும் கஜகேசரி யோகம் – 3 நாளும் ரொம்பவே ஜாலி தான் போங்க, தூள் கிளப்ப போறீங்க; யாரெல்லாம் தெரியுமா?
Gajakesari Yoga Palan Tamil, Guru Chandran Serkai Palan

Gajakesari Yoga Palan Tamil : ரிஷப ராசியில் குரு மற்றும் சந்திரன் சேர்க்கை நிகழ இருக்கிறது. இந்த சேர்க்கை 15, 16 மற்றும் 17ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. சந்திரனின் உச்சம் தான் ரிஷபம். இந்த நிலையில் குரு மற்று சந்திரன் இணைந்தால் கஜகேசரி யோகத்தை உருவாக்குகிறது. இந்த காலகட்டங்களில் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி பெறும். வேலை கிடைக்கும், புதிய முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். எல்லாமேஎ வேக வேகமாக நடைபெறும். கஜகேசரி யோகம் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் மற்றும் மகரம் ராசிகளுக்கு ஏராளாமான நன்மைகளை தர போகிறது.

27
Jupiter Moon Serkai Palan Tamil, Gaja kesari yogam

மகரம்:

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். கடன் பிரச்சனை தீரும். எதிரிகள் தொல்லை நீங்கும். தீராத நோயும் தீரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுப நிகழ்ச்சி நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வீட்டிற்கு மாறும் சூழல் உருவாகும்.

37
Gajakesari 2024 Yoga Palan Tamil, Jupiter Moon Serkai Palan Tamil

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்கு ராஜயோகம் உண்டாகும். அரசியல் தலைவர்களுடன் தொடர்பு உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வு கிடைக்கும். மகன் அல்லது மகளுக்கு பெரிய இடத்திலிருந்து வரன் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

47
Jupiter Moon Serkai Palan Tamil, Guru Chandran Serkai Palan

கன்னி:

ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். 15, 16, 17 ஆகிய தேதிகளில் எடுக்கும் முடிவுகளுக்கு ஒரு நாள் பலன் கிடைக்கும். சொத்து சுகம் சேரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

57
Jupiter Moon Conjuction, Jupiter Moon Serkai Palan Tamil

கடகம்:

சந்திரன் மற்றும் குரு சேர்க்கை உங்களுக்கு ஏராளமான நன்மைகளை தர போகிறது. உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகள் தொல்லை நீங்கும். வருமானம் அதிகரிக்கும். பழைய கடன் தீஉம். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

67
Gajakesari 2024 Yoga Palan Tamil, Jupiter Moon Serkai Palan Tamil

ரிஷபம்:

உங்களுக்கு குரு மற்றும் சந்திரன் இருவரும் லக்கினத்தில் இணைந்த நிலையில் வருமானம் கூடும். பல வழிகளிலிருந்து பணம் வரும். செல்வ, செழிப்பு ஏற்படும். அலுவலகத்தில் உங்களுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப நிகழ்ச்சி நடைபெற நல்ல நேரம் கூடி வரும்.

77
Jupiter Moon Serkai Palan Tamil, Gaja kesari yogam

மேஷம்:

குரு மற்றும் சந்திரன் சேர்க்கை வருமானத்தை அதிகரிக்கும். சொத்து தொடர்பான முயற்சியில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories