
தேவ் தீபாவளி நவம்பர் 15:
Dev Diwali 2024 Palan Tamil : நவம்பர் 15 ஆம் தேதி அதிகாலை 3.53 மணிக்கு பௌர்ணமி திதி ஆரம்பமாகிறது. இந்த நாளில் கடவுளால் கொண்டாடப்படும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தேவர்கள் அனைவரும் பூமிக்கு வருவதாக ஒரு ஐதீகம். தேவ் தீபாவளி நாளில் அபூர்மான யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்கள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கபோகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
திரிபுரி பூர்ணிமா, திரிபுராரி பூர்ணிமா:
கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் தேவ் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால், நவம்பர் 15ஆம் தேதி ஐப்பசி 29ஆம் தேதி பௌர்ணமி திதி ஆரம்பமாகிறது. நவம்பர் 15ஆம் தேதி அதிகாலை 3.53 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் நவம்பர் 16ஆம் தேதி கார்த்திகை மாதம் 1ஆம் தேதி அதிகாலை 3.42 மணி வரை நீடிக்கிறது. இந்து மதத்தில் மிகவும் முக்கியமான பண்டிகை தேவ் தீபாவளி. தேவர்கள் கொண்டாடும் ஒரு பண்டிகை. பௌர்ணமி இரவில் எல்லா தெய்வங்களும் கங்கா காட்டில் தீபாவளியை கொண்டாடுவதாக ஒரு ஐதீகம். அதுமட்டுமின்றி அந்த நாளில் தான் சிவபெருமான் திரிபுராசுரனை வதம் செய்ததாக நம்பப்படுகிறது. ஆதலால், இந்த நாள் திரிபுரி பூர்ணிமா என்றும், திரிபுராரி பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது.
தேவ் தீபாவளி:
வேத பஞ்சாங்கத்தின்படி கார்த்திகை மாத பௌர்ணமி திதி நவம்பர் 15ஆம் தேதி காலை 3.53 மணிக்கு தொடங்குகிறது. இந்த பௌர்ணமி திதி நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை 3.42 மணிக்கு நிறைவடைகிறது. ஆதலால் கார்த்திகை பௌர்ணமி நவம்பர் 15 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் தேவ் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
தேவ் தீபாவளி பிரதோஷ கால ஒரு நல்ல நேரம்:
பஞ்சாங்கத்தின்படி, நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5.10 முதல் 7.47 வரை தேவ் தீபாவள நாளன்று பிரதோஷ கால முகூர்த்தம். இது பூஜைக்கு உகந்த நல்ல நேரமாக கருதப்படுகிறது.
தேவ் தீபாவளி மங்களகரமான யோகம்:
தேவ் தீபாவளி அன்று சந்திரன் ரிஷப ராசியில் இருக்கிறார். இதனால் வியாழனின் தாக்கத்தில் கஜகேசரி யோகம் உருவாகிறது. மேலும், சனி தனது மூல திரிகோண ராசியில் சஞ்சரிக்கிறது. இது சஷ ராஜயோகத்தை உருவாக்குகிறது. சுக்கிரன் மற்றும் வியாழன் ஒருவருக்கொருவர் அறிகுறிகளை மாற்றும். இதன் மூலம் ராஜயோகம் உருவாகிறது. ஆனால் கடகத்தில் செவ்வாய், மீனத்தில் ராகுவுடன் நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்குகிறார். இந்த ராசி மாற்றங்கள் மற்றும் ராஜயோகங்கள் சில ராசிகளுக்கு ஏராளமான நன்மைகளை குவிக்க போகிறது. தேவ் தீபாவளி நாளில் யாருக்கெல்லாம் ராஜயோகம் உருவாகும் என்பது பற்றி பார்க்கலாம்.
ரிஷப ராசி:
தேவ் தீபாவளி ரிஷப ராசியினருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையிலிருந்த பணிகள் முடிவடையும். சொத்து, சுகம் தேடி வரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு தேவ் தீபாவளி நாளில் சிறப்பான பலன் உண்டாகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். மன அழுத்தம் குறையும். காதல் உறவு மேம்படும். காதல் உறவில் இணக்கம் ஏற்படும். திருமண வாய்ப்புகளும் உண்டாகும். முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
தனுசு:
இந்த நாளில் ஏராளமான யோகங்கள் இணைந்து உங்களுக்கு நன்மை அளிக்கும். இதுவரையில் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வு உண்டாகும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும். திருமண வாய்ப்பும் தேடி வரும். நிலுவையில் உள்ள எல்லா வேலைகளும் விரைந்து முடிக்கப்படும்.
கும்பம்:
தேவ் தீபாவளி கும்ப ராசியினருக்கு சிறப்பு வாய்ந்த நாளாக அமையும். இந்த ராசிக்கு சனியுடன் சுக்கிரன், வியாழன் ஆகிய கிரகங்களின் ஆசியும் உண்டு. வேலை தேடுவோருக்கு புதிய வேலை கிடைக்கும். வெளிநாட்டு யோகம் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் ஏற்படும். பிரச்சனைகளுக்கு விடிவுகாலம் பிறக்கும்.