இன்றைய ராசி பலன் - Today Rasi Palan: இன்று யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? 12 ராசிகளுக்கான ராசி பலன்கள்.!

Published : Jan 22, 2026, 12:01 AM IST

January 22 Today Rasi Palan for 12 zodiac signs: ஜனவரி 22, 2026 12 ராசிகளுக்குமான பொது பலன்கள் குறித்தும், அதிர்ஷ்டம் பெறும் ராசிகள், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
112
மேஷம்:
  • இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுவார்த்தை தொடங்கும்.
  • அதிர்ஷ்ட எண்: 9.
  • அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.
  • பரிகாரம்: முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சாற்றி வழிபட நன்மைகள் பெருகும்.
212
ரிஷபம்:
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். புதிய சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.
  • அதிர்ஷ்ட எண்: 6.
  • அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை.
  • பரிகாரம்: லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் நல்லது.
312
மிதுனம்:
  • மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வியாழக்கிழமை என்பதால் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. கொடுத்த கடன்கள் வசூலாகும்.
  • அதிர்ஷ்ட எண்: 5.
  • அதிர்ஷ்ட நிறம்: பச்சை.
  • பரிகாரம்: விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயாணம் செய்வது நல்லது.
412
கடகம்:
  • இன்று எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். உணர்ச்சிவசப்பட்டு பேசுவதைத் தவிர்க்கவும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் ரகசியங்களைப் பகிர வேண்டாம். செலவுகள் கூடும் என்பதால் திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். பயணங்களின் போது கவனம் தேவை.
  • அதிர்ஷ்ட எண்: 2.
  • அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை/கிரீம்.
  • பரிகாரம்: பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபடவும்.
512
சிம்மம்:
  • உங்கள் ஆளுமைத் திறன் வெளிப்படும் நாளாக இருக்கும். தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். அரசாங்க வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய முதலீடுகள் லாபத்தைத் தரும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
  • அதிர்ஷ்ட எண்: 1.
  • அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு.
  • பரிகாரம்: அம்மன் வழிபாடு சிறந்தது. ஏழைகளுக்கு தயிர்சாதம் வழங்குவது சிறப்பு.
612
கன்னி:
  • தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். கடன் சுமை குறையத் தொடங்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. வாழ்க்கைத்துணையின் ஆதரவு மனதிற்கு இதம் தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.
  • அதிர்ஷ்ட எண்: 5.
  • அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை.
  • பரிகாரம்: விநாயகர் வழிபாடு செய்வது தடைகளை நீக்கும்.
712
துலாம்:
  • கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாட்களாக வராத பணம் கைக்கு வந்து சேரும். ஆபரண சேர்க்கை உண்டாகும்.
  • அதிர்ஷ்ட எண்: 7.
  • அதிர்ஷ்ட நிறம்: நீலம்.
  • பரிகாரம்: வெள்ளை நிற மலர்களால் அம்மனை அர்ச்சனை செய்து வழிபடவும்.
812
விருச்சிகம்:
  • நிதானமும் பொறுமையும் தேவைப்படும் நாள். பேச்சில் கனிவு இருந்தால் காரியங்களை எளிதில் சாதிக்கலாம். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளது. வேலையில் அதிக கவனம் செலுத்தவும். உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு கூடும்.
  • அதிர்ஷ்ட எண்: 9.
  • அதிர்ஷ்ட நிறம்: அடர்சிவப்பு.
  • பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடவும்.
912
தனுசு:
  • இன்று அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும். நீண்ட நாள் கனவு நனவாகும். வியாழக்கிழமை என்பதால் உங்கள் ராசிநாதனின் அருள் முழுமையாகக் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க ஏற்ற நாள். ஆன்மீகப் பயணங்களில் ஆர்வம் கூடும்.
  • அதிர்ஷ்ட எண்: 3.
  • அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.
  • பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்யவும்.
1012
மகரம்:
  • கடின உழைப்பால் வெற்றிகளைக் குவிக்கும் நாள். உங்களின் பொறுப்புகள் கூடும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். வாகன யோகம் உண்டாகும். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும்.
  • அதிர்ஷ்ட எண்: 8.
  • அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்.
  • பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடவும்.
1112
கும்பம்:
  • புதிய திட்டங்களைச் செயல்படுத்தும் போது அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையைக் கேட்கவும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குழந்தைகளின் வருங்காலம் குறித்த திட்டமிடல் பலன் தரும்.
  • அதிர்ஷ்ட எண்: 2.
  • அதிர்ஷ்ட நிறம்: ஊதா.
  • பரிகாரம்: இன்று விநாயகர் வழிபாடு தைரியத்தைக் கொடுக்கும்.
1212
மீனம்:
  • குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். சுபச் செய்திகள் வந்து சேரும். உங்களின் ஆலோசனைகள் அலுவலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
  • அதிர்ஷ்ட எண்: 3.
  • அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம்.
  • பரிகாரம்: சித்தர்களின் ஜீவசமாதிகளுக்குச் சென்று தரிசனம் செய்வது மேன்மை தரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories