Chandra Asthamanam in January 2026 rasi palangal: 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சந்திர பகவான் நான்கு நாட்களுக்கு அஸ்தமன நிலையை அடைய இருக்கிறார். இது சில ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். சந்திர அஸ்தமனத்தின் விளைவுகள் குறித்து இங்கு காணலாம்.
ஜோதிடத்தில் சந்திர பகவான் மிகவும் வேகமாக நகரக்கூடிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் இரண்டரை நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். சந்திர பகவான் ஒவ்வொரு மாதமும் அஸ்தமித்து மீண்டும் உதயமாகிறார். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் ஜனவரி 17ஆம் தேதி காலை 6:13 மணிக்கு சந்திரன் அஸ்தமித்து, ஜனவரி 20 ஆம் தேதி மாலை 7:20 வரை அஸ்தமன நிலையில் இருக்கிறார். இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
24
மேஷம்
மேஷ ராசிக்கு சந்திரனின் அஸ்தமன நிலை மிகவும் சாதகமான சூழலை உருவாக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் தீரும். பிரச்சனைகளை பேசி முடிப்பீர்கள். உறவுகளில் திருப்தி அடைவீர்கள். சொத்துக்கள் வாங்குவது அல்லது விற்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். திருமணமானவர்களுக்கு குடும்ப உறவில் மகிழ்ச்சி நீடிக்கும். வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். சந்திர பகவானின் நிலையை மேலும் வலுப்படுத்துவதற்கு ஏழை எளியவர்கள் அல்லது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பால் தானம் செய்யலாம்.
34
துலாம்
சந்திரனின் அஸ்தமன நிலையானது துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும். உடல் நலத்திலிருந்த கோளாறுகள் நீங்கி, முன்னேற்றம் காணப்படும். 2026 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே நிதி நிலைமை வலுவாக மாறும். இந்த காலகட்டத்தில் நிதி ரீதியான அல்லது குடும்ப ரீதியான பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. குடும்பத்தில் நிலவி வந்த தவறான புரிதல்களை தீர்ப்பதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சந்திர பகவான் மனதின் காரகராக விளங்குவதால் வெளிப்படையாக பேசி பிரச்சனைகளை சரி செய்வீர்கள். ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஏழைகளுக்கு அரிசி தானம் செய்வது சிறப்பு.
சந்திரன் அஸ்தமனம் ஆகும் நான்கு நாட்களும் கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். ஏதேனும் ஒரு வழிகளில் இருந்து உங்களுக்கு பணம் வந்து கொண்டே இருக்கும். இதன் காரணமாக நிதி சிக்கல்கள் தீரும். கடந்த ஆண்டு நீங்கள் வாங்கிய அனைத்து கடன்களையும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கும்ப ராசிக்காரர்கள் இதுவரை அனுபவித்து வந்த பணக்கஷ்டங்கள், உடல் நோய்கள் நீங்கும். உறவுகள் மேம்படும். ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இனிப்புகளை பிரசாதமாக வழங்குவது நன்மை தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)