Yuti Drishti Yog 2026: 10 ஆண்டுகளுக்குப் பின் நேருக்கு நேர் சந்திக்கும் புதன் சுக்கிரன்.! ஜனவரி 2026 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.!

Published : Dec 15, 2025, 10:33 AM IST

Mercury Venus Conjunction 2026: ஜனவரி 29, 2026 அன்று புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டு சுப கிரகங்களும் இணைந்து யுதி திருஷ்டி யோகத்தை உருவாக்குகின்றன. இதன் விளைவாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. 

PREV
14
யுதி திருஷ்டி யோகம் 2026

வேத நாட்காட்டியின் படி 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல கிரகங்கள் இடம்பெயர்கின்றன. இதன் விளைவாக சுப யோகங்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் ஜனவரி 29 ஆம் தேதி புதன் மற்றும் சுக்கிரன் ஒருவருக்கொருவர் ஜீரோ டிகிரி நிலையில் நிலை நிறுத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக யுதி திருஷ்டி யோகம் உருவாகிறது. இந்த இணைப்பு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பிரகாசத்தை கொண்டுவரும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

24
கும்பம்

புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை கும்ப ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். ஜனவரி 2026 ஆம் ஆண்டு நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களை அனுபவிப்பீர்கள். திடீர் பண வரவால் சொத்துக்கள் வாங்கும் யோகம் கிடைக்கும். உங்கள் பழைய வாகனங்களை விற்று விட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். 

தொழிலதிபர்கள் வணிகத்தில் குறிப்பிடத்தக்க லாபத்தைப் பெறுவீர்கள். நீங்கள் காத்திருந்த பெரிய ஒப்பந்தங்கள் கைக்கு கிடைக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். உங்கள் ஆசைகள் நிறைவேறும்.

34
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு யுதி திருஷ்டி யோகம் சாதகமான காலகட்டத்தை வழங்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு புதிய வழிகள் திறக்கப்படும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் நல்லிணக்கம் ஏற்படும். 

நிலுவையில் இருந்த பணம் மீண்டும் கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பழைய கடன்களை அடைத்து மன நிம்மதி அடைவீர்கள். தொழிலதிபர்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். நிதி ஆதாயம் பெருகுவதால் சேமிப்பை தொடங்குவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். உள்நாடு அல்லது வெளிநாடு பயணம் செய்யும் வாய்ப்புகள் உருவாகும்.

44
துலாம்

ஜனவரி மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் மாதமாக இருக்கும். சுக்கிரன் மற்றும் புதன் இணைவதால் புதிய சேமிப்புகளை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலையிலும் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். நீதிமன்ற வழக்கு தொடுத்திருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் நிறைய ஊதியத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 

எதிர்பார்த்து இருந்த சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கான செய்திகள் கிடைக்கலாம். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்தி புதிய திட்டங்களை தொடங்குவீர்கள். ஜனவரி மாதம் தொடங்கி உங்களின் விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories